பக்கம்:இளந்தமிழா.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜேய் ஹிந்த்

பல்லவி

ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்
ஜெய ஜெய ஜேய் ஹிந்த்!

சரணம்

அடிபடா முரசம்
ஆர்த்தெழுந் தாடடா
அன்னை கை விலங்குகள்
அகன்றன காணாய் - ஜேய் ஹிந்த்

இன்னுயிர் தந்தவள்
ஏக்கமுந் தீர்ந்தே
புன்னகை புரிந்தாள்
பொன்முடி சூடினாள் - ஜேய் ஹிந்த்
 
சிறுமைகள் மாய்ந்தன
சீரெலாம் பெருகிடும்
வறுமையில் வாடிய
மக்களும் ஓங்குவார் - ஜேய் ஹிந்த்

இன்பமும் அன்பும்
எங்குமே பொங்கிட
அன்னை யெம் பாரதி
அறம் வளர்த் திடுவாள் - ஜேய் ஹிந்த்



72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/74&oldid=1361484" இலிருந்து மீள்விக்கப்பட்டது