பக்கம்:இளந்தமிழா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கார்த்திகைப் பிறை

காத்திகைத் திங்கள் கருமேகம் வானத்தைப் போர்த்துச் சளசளெனப் பூமழைதான் பெய்கிறது. விடாத மழைதன்னில் வெம்மை தணியுமென்றோ கெடாத கதிரோனும் கண் மறைந்து திரிகின்றான்! ஊரெங்கும் தண்ணிர் ஊற்றெடுத்துப் போகிறது; காடெங்கும் வித்திட்டுக் கரும்பச்சை தான் தரித்து, ஓங்கிவந்த சோளம் உழவன் மனம் வாடச் (வில்லை சோர்ந்து வெளுத்ததுவே: செங்கதிர்கள் தோன்ற எப்பொழுதும் மாலை இளவெயில் போலேதோன்றும் ஒப்பரிய காலமதில் ஒருமாலைப் போதினிலே தென்னஞ் சிறுதோப்பைத் தேடியே சென்றங்கு சின்னஞ் சிறுமழலைச் சிங்காரசுடைய நாகணவாய்ப் புட்கள் நாவொடுங்கி வீற்றிருந்து நாளும் நனையிறகை நடுங்கி யுலர்த்துகின்ற தோற்றமதில் நெஞ்சம் தோய்ந்திடவே வீற்றிருந் ஆற்றப் பெருஅமைதி அரசு செலுத்திற்று: (தேன் ஒலை நுனியில் ஒளிர்முத்துப் பூத்ததுபோல் ஆலும் துளிவிழுந்து அமைதி பெருக்கிற்று. சோம்பி எருமைகள்போல் தூங்கியே ஊர்கின்ற மேகத் திடையிருந்து மெல்ல விழுவதுபோல் இருள் கூட லாயிற்று; இன்னும் பரவவில்லை. ஒருமேகம் மேற்கில் உயரப் பறந்ததுபார்: கண்டேன் கருந்திரைதான் கருணை புரிந்திடவே:

           79
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/81&oldid=1359153" இலிருந்து மீள்விக்கப்பட்டது