பக்கம்:இளந்தமிழா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலிக்குக் கடிதம்


'கறுப் பெ' ன்றுனைப் பழித்தார்
   கவலை நான் கொள்ளவில்லை?
‘விருப்புற்று நீ யுரைக்கும்
   வேல் விழிக ளெங்கெ'ன்றார்.
மதுவில் மயங்கிடுங் கார்
   வண்டு நிகர் நின் கண்கள்
வதியும் ஒளி யறிய
   மதியில்லார் என் நண்பர்;
"பார்த்த பல மங்கை யெலாம்
   பஞ்சத் தழ கென்பாய்,
சீர்த்தி மிகும் அஜந்தா வின்
   சித்திரம் போல் வேணு மென்பாய்
எங்கடா நீ புகழ்ந்த
   எழிலெல்லாம்? உன்மனதை
இங்கே பறி கொடுக்க
   என்ன தான் கண்டு விட்டாய்?'
என்றே பல பல வாய்
   ஏளனங்கள் பேசுகின்றார்:
குன்றா உயிர்க் காதல்
   கொழுந்திடச் செய்யுனை யறியார்
நகைப்பைக் கண்டொரு சிறிதும்
   நான் சோர வில்லை; இன்று
முகங் கோணி உரை சொன்னாய்
   முடிவில்லை என்துயர்க்கே.


89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/91&oldid=1359505" இலிருந்து மீள்விக்கப்பட்டது