304
மந்திரங்களைக் கண்டவர்கள் (த்ரஸ்டாக்கள்) மட்டுமே அவர்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது வேத ரிஷிகள் என்று கூறப்படுபவர்கள் யாருமே வேத வசனங்களைத் தங்கள் சிந்தனை வழி எழுதிய வேத கர்த்தாக்கள் இல்லை. கர்த்தாக்கள் என்றால் தாங்களாகவே உருவாக்கியவர்கள் அல்லது படைத்தவர்கள் அல்லது புனைந்தவர்கள் எனப் பொருள்படும். ஆனால், வேத ரிஷிகளைப் பொருத்தவரை வேதங்களைக் கண்ணெதிரே கண்டவர்களே தவிர, புதிதாக உருவாக்கியவர்கள் அல்ல.
இறைவேதம் பெற்றது எப்படி?
கண்ணெதிரே கண்டவர்கள் என்றால் எப்படிக் கண்டவர்கள்?
ஞானிகளாகிய ரிஷிகள் தங்கள் ஐம்புலன்களைக் கடுமையான மனக் கட்டுப்பாட்டால் அடக்கியவர்களாக, மனப் பக்குவம் பெற்ற நிலையில் இறை தியானத்தில் (உள் நோக்கில்) ஈடுபட்டு, இறையுணர்வு பொங்க இறை நெருக்கம் பெறுவர். அந்நிலையில் அவர்தம் புறக் கண்கள் மூடப்பட்ட நிலையில் அகக் கண்கள் திறந்து கொள்கின்றன. அப்போது அவர்கட்கு ஒரு உணர்வு தட்டுப்படும். அப்போது அவர்கள் தங்கள் புறக் கண்களைத் திறந்து வானை நோக்கிப் பார்த்தால் இறை வசனங்கள் மந்திரங்களாக எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் பார்த்து மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொள்வார்கள். பின்னர், அம்மந்திரங்களைத் தங்கள் சீடர்களிடம் கூறி, அவற்றை எழுத்தில் பதிந்து கொள்வார்கள். ஆகவே தான் இந்த வேத ரிஷிகள் 'த்ரஷ்டாக்கள்’ என அழைக்கப்பட்டனர்.
இறுதி இறை தூதருக்கு இறைவன் கட்டளை
இஸ்லாமிய நபிமார்களுக்குக் குறிப்பாக இறுதி நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு இறைச் செய்தி கிடைத்ததும்