பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பின்புறமாகவும் வைத்து, இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தவும். பின்புறக் கால் மடியாமல் விறைப்பாகவும் முன்புறக் கால்கள் முழங்கால் மடியவும் இருக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும் உடனே இடது கால் பின்புறம் செல்ல, வலது கால் முன்புறமாக இருப்பது போல மாற்றிச் செய்யவும். மூச்சிழுக்கும் முறையும் விடும் முறையும் முன்புபோல்தான். இப்படி மாற்றி மாற்றி 10 தடவை செய்க. 3 சுற்றுக்கள். இடையே ஒரு திமிடம் ஒய்வு. பயிற்சி 6 பக்கம் சாய்தல் (Side eேad) ஆரம்ப நிலை: இயல்பாக நின்று. இரு கைகளிலும் எடைக் கண்டுகளை வைத்து நிற்கவும். படத்தில் ஒரு கையில் தான் எடைக் குண்டு இருக்கிறது. இரண்டு கைகளிலும் இருந்தால் உடனே மாற்றி மாற்றிச் செய்ய செளகரியமாக இருக்கும்.