பக்கம்:உணர்வின் எல்லை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


உணர்வின் எல்லை

1. பாரதியும்-பாரதியும்

‘ஆயுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, சிலேடைதிரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.

சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது. ’அறிவுத் தெய்வம்’ என்று அறிஞர் போற்றிப் பணியும் பாரதிபுனிதத் தேவியாகிய கலைமகளுக்குப் பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. அவற்றுள் ’பாரதி’ என்பதும் ஒன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/9&oldid=1383225" இலிருந்து மீள்விக்கப்பட்டது