பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

5

டும்; அதனேடு நூலகமும் சிறந்த முறையில் பணியாற்றல் வேண்டும். இந்த இரண்டுமில்லாவிட்டால், இப்பகுதியில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளும் அறிவுரைகளும் வெறும் எழுத்துக்களாகவே கின்றுவிடும். அவ்வாறு நில்லாமல் பயன் பல அளிக்கச் செய்வது நல்ல நூலகமே ஆகும்.'

இவ்வாறு உயர்நிலைப்பள்ளிக் கல்விக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

உயர்நிலைப்பள்ளி நூலகமே மாணவர்களின் பிற்கால வாழ்க்கையின் செம்மைக்கு அடிகோல வல்லதாகும். நல்லன எண்ணவும் சிறந்தன செய்யவும் வல்ல பேருள்ளத்தை மாண்வர்க்கு அளிப் பது நூலகமே. காலத்தையும் தூரத்தையும் வென்றிடும் வன்மை நூல்களுக்குண்டு. அத்தகைய நூல்களே அறிஞர் எழுதியவை. அணுவையும் வெல்லும் கருவிகள் கண்டுபிடித்த இந்த நூற்ருண்டிலும் கடந்த கால அறிவையும் அனுபவத்யுைம் நமக்கு அள்ளித் தரவல்லனவாக விளங்குவன நூல்களே. எனவே, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்த நூல்களைத் தேர்ந்து எடுக்கும் பயிற்சியும் நூல் பல படிக்கும் பழக்கத்தையும் அதற்கு உரிய நேரத்தையும் உயர்நிலைப்பள்ளிக் கல்வி அளித்தல் வேண்டும். அதற்குச் சிறந்ததோர் அழகிய நூல் நிலையத்தை அது பெற்றிருத்தல் வேண்டும்.


பள்ளி நூலக அமைப்பு

பள்ளியிலே ஒரு பொதுநூலகம், அல்லது, வகுப்புநூலகம், அல்லது பாடநூலகம் இருக்கலாம். அதுவிடுத்து இம்மூன்றுமோ, அன்றி, இவற்றுள் இரண்டோ பள்ளியில் இருக்கலாம். இந்த மூவகை நூலகங்களில் சிறந்தது பொதுநூலகமாகும். இந்த நூலகத்தினுல் பள்ளிமாணவர்க்கும் நலன் உண்டு; பணச்சிக்கனமும் ஏற்படும். இந்த நூலகம் உயர்நிலைப்பள்ளிகள் எல்லா