பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உயர்நிலைப்பள்ளி நூலகம்

வற்றிலும் இருத்தல் நன்மை பயக்கும். இத்தகைய நூலகம் பயிற்சி பெற்ற நூலக அலுவலரின்கீழ் இயங்குதல் வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் நூலக அனுபவம் ஏற்படும் அளவுக்கு நூலகம் அமைக்கப்பெறல் வேண்டும். வகுப்புநூலகத்தைவிடச் சிறந்த பயனை மாணவர்க்கு நல்குவது இந்த நூலகமே. பள்ளிக் கூடம் உள்ள நாள் முழுவதும் நூலகம் திறந்திருக்கவேண்டும்.

இத்தகைய பொதுநூலகம் ஏற்படுத்துவதால் ஒரே நூலில் பல படிகள் இருத்தல் தவிர்க்கப்படும். அவ்வாறு வகுப்புநூலகத் தால் செய்தல் முடியாது. வகுப்பு நூலகத்தால் ஏற்படும் பணச் செலவும் குறையும். ஒரே நாளில் ஒரே வகையான நூல்களைப் பல மாணவர்கள் எடுத்துப்படிக்கப் பொது நூலகத்திலே வாய்ப்புண்டு.

முன்னேறி வரும் தற்கால உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் எல்லை நாள் ஆகஆக விரிவடைந்துகொண்டு வருகிறது. இலக்கியம் - மொழிநூல்; வரலாறு - அரசியல் போன்ற இணையான பாடங்களின் எல்லை தற்போது மிகவும் விரிந்து ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றது. இத்தகைய விரிவுக்கேற்றவகையில் அறிவை அளிக்கவல்லது சிறந்த நூலகமே. இந்நூலகம் பல்துறையிலும் பாய்ந்து செல்லும் மனித அறிவின் விரிவைக் காட்டவல்லதாகும். ஒரு பாடத்தைப் படிக்கும்பொழுதே மற்ருெரு பாடநூலில் விருப்பம் எழல் குழந்தையுள்ளத்தின் இயல்பா கும். அக்காலை அந்நூல் பிறிதொரு வகுப்பறை நூலிலே இருக்குமால்ை தடையுண்டாகிக் குழந்தையின் அறிவுத் தாகம் அடங் காது. நாளடைவில் அறிவுத்தாகமே எழாமற் போய்விடும். இத்தகைய தடை ஏற்படாதவாறு செய்வது பொதுநூலகமே. கருத்தரங்குகளையும் ஆராய்ச்சியரங்குகளையும் பொதுநூலகத்தில் நடத்துதல் நல்லது. வகுப்புநூலகம் ஏற்படுத்தல் அறிவினைச் சிதைக்கும் இயல்புடையதாகும். உடனடியாகப் பொது நூலகங்கள் ஏற்படுத்த முடியாவிடில் வகுப்புநூலகங்கள் ஏற்படுத்தலாம். அதனோடு பொதுநூலகம் அமைக்கும் வேலையையும் தொடங்க வேண்டும்.