பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

7

வகுப்பு நூலகம் என்பது இருபது முதல் அறுபது நூல்கள் வரையில் கொண்ட ஒன்ருகும். இவையத்தனையும் பொறுக்கி எடுக்கப்பட்ட பாடநூல்களாகும். இத்தகு நூலகம் வகுப்பாசிரியரின் பார்வையில் இருக்கும். மேலும் வகுப்புநூலகங்களால் பயன்பெறுவன தொடக்கப் பள்ளிகளே. வகுப்புநூலகம் சிறந்த முறையில் மாணவர்க்குப் பயன்படுவது வகுப்பாசிரியர் கையில்தான் உள்ளது. வகுப்பாசிரியர் ஆசிரியப் பயிற்சியோடு ஒரளவுக்கு நூலகப் பயிற்சியும் பெற்றவராக இருத்தல் வேண்டும். அதோடு சுறுசுறுப்பும், மாணவர்க்கு நூல் வழங்குவதிலே பெருவேட்கையும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வகுப்புநூலகம் எவ்வளவுதான் அடக்கமாகவும் ஒழுங்காகவும் இருந்தாலும் பொதுநூலகத்துடன் போட்டி போட முடியாது. பள்ளிப்பருவம் புதுமை வேட்கை மிக்க பருவம். உடையிலும் உணவிலும் எல்லாவற்றிலுமே புதுமை காண விழையும் உள்ளம் மிகுந்த பருவம். அதனல் வகுப்புநூலகத்திற்குப் புத்தம் புதிய நூல்கள் பொதுநூலகங்களிலிருந்து வந்தவண்ணமாக இருத்தல் வேண்டும்.

பாட நூலகம் என்பது இலக்கியம், வரலாறு போன்ற தனிப் பட்ட பாடங்களுக்குரிய நூல்களே மிகுந்த நூலகமாகும். இந்த நூலகங்கள் பாட ஆசிரியர்களின் மேற்பார்வையில் இயங்கும். இத்தகையவை நான்கு, ஐந்து, ஆறு ஆகிய படிவங்களிலேயே அமைக்கப்படும். ஏனெனில் அங்குத்தான் சிறப்பாக ஒவ்வொரு பாடத்துக்கும் எனத் தனித்தனி ஆசிரியர்களும் விருப்பப்பாடங்களும் (optional) உண்டு. பாட ஆசிரியர்கள் அவ்வப்பொழுது தம் பாடம்பற்றி வெளியாகும் நூல்களை உடனே வாங்கி வைத்தல் வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களின் அறிவு காலத்தோடு ஒட்டி வளர்தல் முடியும்.

பாடநூலகம் பொதுவாக அறிவியலுக்கே தேவைப்படும். ஏனெனில் வரலாறு, தத்துவம் ஆகியவற்றைவிட அறிவியலே