பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடமும் இருக்கைகளும்

11


யுள்ளது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நூலக மண்டபம் அமைத்திட வேண்டும். அவ்வாறு அமைக்க வேண்டு மாயின் ஒரே நேரத்தில் 75 மாணவர்கள் உட்கார்ந்து படிக்கத் தக்க வசதியுடன் அது கட்டப்பட வேண்டும். ஆனல், அது தற்போது இயலாத காரியமாகும். எனவே, காற்பது மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கத்தக்க அளவுக்கு அம்மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நூலகத்தின் கிளையான படிப்பகம் ஒரே நேரத்தில் பதினைந்து மாணவர்கள் படிக்கும் அளவிலும், ஆராய்ச்சியரங்கு பதின்மர் அமர்ந்து ஆராயும் அளவிலும் அமைக்கப்பட வேண்டும். நூலகத்தலைவர் அறை பின்புறம் நூலகத்தைப் பார்க்கும் முறையில் அமைக்கப்பட வேண்டும். நூலகம் எப்பொழுதும் நல்ல வெளிச்சமும், ஏற்ற தட்ப வெட்பமும் கொண்டிலங்கும் வகையில் அமைக்கப்படவேண்டும். மேற்சாளரங்கள் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வேண்டிய அளவுக்கு மின்விசிறிகள் சுழலவேண்டும். சுருங்க உரைப்பின் பள்ளிக் கட்டிடங்களிலேயே சிறந்த கட்டிடமாக அது இலங்க வேண்டும்.


இருக்கைகள்


கட்டிடத்திற்கு அடுத்தாற்போல் கவனிக்கப்படவே. இருக்கைகளாகும். இந்த இருக்கைகள் நூல் இருக்கைகளென்றும் ஆள் இருக்கைகளென்றும் இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகையான இருக்கைகளின் செம்மையும் சீருமே நூலகத்திற்கு மாணவரை ஈர்க்கவல்லன. எனவே, இவற்றை எந்த அளவுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைக்க முடியுமோ அந்த அளவுக்கு அமைத்தல் வேண்டும்.

நூல் அலமாரிகள், நூல் அட்டவணை அட்டைப் பெட்டிகள், நாளிதழ்ப் பலகை, பருவ வெளியீட்டு அட்டைகள், புதுநூல் அலமாரிகள், பருவ இதழ்விவரப் பலகைகள் ஆகியவை நூலிருக்கைகள்; நூலகத் தலைவரும் அவர்தம் அலுவலகத்தாரும்