பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடமும் இருக்கைகளும்

13


அது பொருந்தாது. வேண்டுமானல் அது மலிவான விலைக்குக் கிடைக்குமென்று கூறலாம். மரத்தாலானதைவிட இரும்பு அலமாரி விலை மிக்கது; நீண்டகாலம் உழைக்கவல்லது. என்ருலும், ஏழைநாடான இந்தியாவில் மர அலமாரிகளே பள்ளி நூலகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.


அலமாரிகளின் அளவுகள்பற்றி இனிப் பார்ப்போம்.


1. நீளம் அல்லது உயரம் ... ... ...6 அடி, 10 அங். முதல்

7 அடி வரை

2. அகலம் ... ... ... ... ... 3 அடி

3. கனம் ... ... ... ... ...8 அங்

4. ஓர் அடுக்கின் உயரம் ... 10 முதல் 12 அங். வரை

5. பருவவெளியீட்டுக்குயரம் 12 அங்

6. தட்டின் கனம் ... ... ...1 அங்

7. ஓர் அலமாரியின்

தட்டுக்கள்... ... ...8

8. ஒரு தட்டில் வைக்கும்

நூல்கள் ... 24

9. ஒரு அலமாரியில்

வைக்கும் நூல்கள் ... 200

10. அடித்தட்டுக்கும்

தரைக்கும் இடைவெளி... ...4 முதல் 6 அங். வரை


நூலகத்தில் எத்தனை அலமாரிகள் இருக்க வேண்டுமென்பது நூலகத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தையும், பள்ளிமாணவர்களின் தொகையையும் பொருத்தது. நமது நாட்டில் பள்ளி மாணவன் ஒருவனுக்குச் சராசரி எட்டு முதல் பத்து நூல்கள் தேவை. அவ்வாறெனின், 750 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியின் நூலகத்துக்கு 7500 நூல்கள் தேவை. பணத்துக்கேற்ப, நாளாவட்டத்தில் அல்மாரிகளைப் பெருக்கிக் கொள்ளலாம்.