பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பெஞ்சுகள் - மேசைகள் - நாற்காலிகள்


இனிமேல் இருக்கைகளை நோக்குவோம். வகுப்பறைகளில் போடப்பட்டுள்ள பெஞ்சுகளைவிட அழகான .பெஞ்சுகள் நூலகத்தில் போடப்பட வேண்டும். அவை மெத்தை நாற்காலிகளாக - பூஞ்சேக்கைகளாக இருத்தல் மேலும் நல்லது. வகுப்பறைகளிலுள்ள அடக்குமுறை இங்கே துளியேனும் இருத்தல் கூடாது. எண்ண, எழுத, படிக்க முழு உரிமை நூலகத்தில் தவழவேண்டும்.

மேசைகள் வட்டமானவையாகவோ, நீண்ட சதுரமானவையாகவோ இருத்தல் நல்லது. இரண்டும் கலந்து கலந்து போடல் கவர்ச்சியாக இருக்கும். மேசைகளின் நீளம் ஐந்து அடி, அகலம் மூன்றரையடி. மேசை ஒன்றிற்கு ஆறு பேர்கள் இருத்தல் போதுமானது. வேண்டுமானல் இருபுறங்களிலும் ஒவ்வொருவராக இரண்டுபேர் கூடுதலாக இருந்து பயன்படுத்தலாம். மேசையின் உயரம் இரண்டரை அடியை மிஞ்சலாகாது. முதல் நான்கு படிவ மாணவர்க்கு ஏற்றது இரண்டடி உயர மேசையே. வட்ட மேசையின் விட்டம் நான்கடிக்கு மேலிருத்தல் ஆகாது.

நாற்காலிகள் உறுதியான மரத்தில் அழகாகவும் ஏற்றதாகவும் செய்யப்பட வேண்டும். வளைந்த பின்புறமும் குவிந்த மெத்தையும் உடைய நாற்காலிகள் பயன் மிக்கவை. முப்பதங்குல உயரமான மேசைக்குப் பதினெட்டங்குல உயரமான நாற்காலி போதும். சிறுவர்களுக்குப் பதினன்குமுதல் பதினறு அங்குல உயரமான நாற்காலிகள் ஏற்றவை.

உயர்நிலைப்பள்ளி நூலகம் பெரும்பாலும் ஒரே நூலதிகாரியால் நடத்தப்படும். அவ்வதிகாரிக்கு இரண்டு வகையான மேசை தேவை. ஒன்று நூலகவேலைகளைக் கவனிப்பதற்கும், மற்ருென்று நூல்களை வழங்குவதற்கும் உரியவை.

நூல்களைக் கொடுத்தல், வாங்கல், தண்டப்பணம் பிரித்தல், மாணவர்ப்பதிவு, மாணவர்க்கு நூல்களைத் தேர்ந்தெடுத்தளித்தல்,