பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உயர்நிலைப்பள்ளி நூலகம்


அவற்றில் ஆயிரம் பொய்ப்புதினங்கள் இருக்குமானல் பொய்ப் புதினம் ஒன்றுக்கு இரண்டு அட்டைகள் வீதமும், ஏனைய நூல் ஒன்றுக்கு ஐந்தட்டைகள் வீதமும் ஆக 2,200 அட்டைகள் அட்டவணைப் பெட்டியில் இருத்தல் வேண்டும். ஆயிரத்து நூறட்டைகளுக்கு ஓரறை வீதம் இருபதறைகள் பெட்டிக்குள் அமைக்கப்பட வேண்டும்.

நூலகம் ஆண்டுதோறும் வளரக்கூடியது. அதற்கேற்ப அட்டவணைப் பெட்டிகள் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நூலுக்கும் ஐந்தட்டைகள் வைத்தற்குரிய இடம் அறைகளில் ஒதுக்கவேண்டும். ஆண்டுதோறும் வாங்கப்படும் நூல்களின் எண்ணிக்கை நூலகத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைப் பொருத்தது. ஒரு நூலகத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரருபாய் மானியம் வழங்கப்படுமானல், சராசரி ஐந்து ருபாய் ஒரு நூலுக்கு விலையானல், ஆண்டுக்கு 200 நூல்கள் நூலகத்துக்கு வரும். அவ்வாறயின் அவற்றுக்கு ஆயிரம் அட்டைகள் தேவைப்படும்; ஓர் அறை அவற்றுக்கு வேண்டும். அட்டவணைப் பெட்டிகள் எத்தனையறைகளை வேண்டுமானலும் கொண்டு இருக்கலாம். நான்கறைப் பெட்டி, எட்டறைப் பெட்டி, பதினறறைப் பெட்டி என்றிவ்வாறு பலதரப் பெட்டிகள் உண்டு. இனிவரும் மூன்றுமுதல் ஐந்தாண்டுகளில் வாங்கப் போகும் நூல்களுக்கேற்ற அறைகளை இப்பொழுதே அட்டவணைப் பெட்டிகளில் அமைத்து வைத்தல் நல்லது. அறைகளையமைத்தல் மிகவும் எளியதாகும். அட்டைகள் ஒவ்வொன்றும் அடிப்பகுதியில் துளையிடப்படும். அவற்றின் ஊடே பித்தளைக்கம்பி ஒன்று செல்லும். அறைகள்யாவும் பெட்டியோடுகவ்வு முறையில் பொருத்தப்பட்டிருக்கும். அதனல் அவை கீழே விழ ஏது இல்லை. ஒவ்வோரறையின் முகப்பிலும் பொருளடக்க அட்டை பொருத்தப் பட்டிருக்கும். அட்டைகள் எண்வரிசை அல்லது அகரவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ற முறையில் அறைகளும் இருக்கும். அட்டவணைப் பெட்டிகள் கன்முறையில் வெளிச்சம் படும்படியான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.