பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3.நூலக நிதி


உயர்நிலைப்பள்ளியில் சிறந்ததொரு நூலகம் இருந்தால் ஒழிய அந்தப்பள்ளியில் முன்னேற்றமெதுவுங் காண முடியாது. எனவே, நூலகத்துக்கெனத் தனி நிதி ஒதுக்கவேண்டியது மிக மிக அவசியமாகும்.

உயர்நிலைப்பள்ளிக்குப் பல்வேறு வழிகளில் பணம் வருகிறது. மாநில அரசாங்கம், உள்ளுர் ஆட்சிமன்றம் ஆகியவை மானியமாக ஆண்டுதோறும் பள்ளிகளுக்குப் பணம் தருகின்றன. சில வள்ளல்கள் நன்கொடையாகப் பணம் பள்ளிகளுக்குத் தருகின்றனர். சில கழகங்கள் பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்குகின்றன. இவ்வாறு வந்து சேரும் பணத்தோடு மாணவர்கள் செலுத்தும் பள்ளிக்கட்டணத்தின்மூலம் கிடைக்கும் பணமும் சேருகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் வந்துசேரும் பணத்தைச் செலவழிக்கும்பொழுது அதில் குறிப்பிட்ட தொகை ஒன்றை நூலகத்துக்காகச் செலவிட வேண்டியது இன்றியமையாதது ஆகும். பள்ளிக்கென ஒதுக் கப்படும் பணம் எல்லாத் துறைகளுக்கும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை. எனவே, நூலகத்துக்கெனக் குறிப்பிட்ட தொகை ஒன்றை ஆண்டுதோறும் பள்ளிப் பணத்திலிருந்து ஒதுக்கவேண்டியது கட்டாயமாகும். பணம் ஒதுக்குவதற்குமுன்னல், பள்ளி மாணவர்களின் தொகை, எப்பொழுதாவது நூலகம் வந்து படிக்கும் பெற்றேர்கள், பிறர் ஆகியவரின் தொகை, சராசரி ஒரு மாணவருக்குக் கொடுக்கப் படும் நூல்களின் எண்ணிக்கை, குறிப்புநூல்களின் தொகை, நூலகத்தின் வேலைநேரம், வேண்டிய நூல்களை வாங்கல், பதிதல், வரிசைப் படுத்தல், அட்டவணை செய்தல் ஆகிய பணிகளின்