பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக நிதி

19


தரம், ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களின் ஊதியம் ஆகிய அனைத்தும் கணக்கிடப்படல் வேண்டும்.

பள்ளிநூலகத்துக்கு இரண்டுவிதக் கணக்கு மூலம் பணம் ஒதுக்கப்படும். சராசரி ஒரு மாணவன் பயன்படுத்தும் நூல்களின் விலையைக்கொண்டு பணம் ஒதுக்கல் ஒரு முறை; அல்லது மாணவர்களின் தரத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் பயன்படுத்தும் நூல்களின் விலையைக்கொண்டு பணம் ஒதுக்கல் மற்ருெரு முறை. நமது நாட்டின் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவு 500 மாணவர்களும், நிறைந்த அளவு 750 மாணவர்களும் படிக்கலாம் என்பது விதி. மேற்கூறிய இரண்டு முறைகளுள் சராசரி முறையே சிறந்தது. எனவே, 500 மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளி நூலகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை, மாணவர்க்குச் சராசரி ரூபாய் 5 என்ருல், 2500 ரூபாயாகும். இங்கிலாந்தில் சராசரிப்பணம் ஐந்து சில்லிங்காகும். பள்ளிநூலகத் தின்தரம், நூல்களின் விலை, பிற இருக்கைகளின் தரம், நூலகத்தார் ஊதியம் ஆகியவற்றிற்கு ஏற்பக்காலங் தோறும் மாறிக்கொண்டே இருக்கும். பள்ளி தொடங்குவற்கு முன்னரே பள்ளியாளர்கள் நூலகத் தலைவருக்கு, நூலகத்தின் நிதி நிலைமையைத் தெரிவித்துவிட வேண்டும்.

நூலகத்தின் மானியம் உயர்ந்தால், நூலகத்தின் தரமும் உயருமென்பது ஒருதலை. மானியத்துக்கேற்றவாறு நூலகச் செலவினத் தயாரித்தற்காக நூலகத் தலைவர் மிகுந்த துன்பப்பட வேண்டியிருக்கும். அடிக்கடி பள்ளி அதிகாரிகளால் நூலககிதி குறைக்கப்படுதலுண்டு. அதனல் நூலகத்தலைவரும், நூலகமும் துன்பம் பல பெற ஏதுவாகும்.

நூலகத்தின் வரவு செலவுகளை இரண்டு பிரிவாகக் கூறலாம். ஆண்டுதோறும் செலவாவது ஒன்று; எப்பொழு தாவது செலவாவது மற்றென்று. முன்னதை மானிய மென்றும்,