பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பின்னதை இருப்பென்றும் அ ைழக்கலாம்.

தொடக்கத்தில் இடச்செலவு, கட்டிடச் செலவு, மேசை நாற்காலி முதலிய இருக்கைச் செலவு, நூல் வாங்கிய செலவு, அலமாரி வாங்கிய செலவு போன்றவை இருப்பு எனப்படும். கட்டிடம் கட்டல் முதலியவை ஆண்டுதோறும் நிகழ்தலில்லை. எனவே இத்தகைய செலவைப் பள்ளிப் பணத்திலிருந்து எடுத்துச் செலவழிப்பின் அந்தப் பள்ளிநூலகம் பெரும்பேறு பெற்ற ஒன்றகும். ஆண்டுச் செலவுக்கு மானியம் போதாத நிலையிலுள்ள பெரும்பான்மையான பள்ளிநூலகங்கள் இதுபோன்ற செலவுகளுக்குப் பெரும்பாலும் பொதுமக்களையே நம்பி வாழும்.

நூலகம் ஆண்டுதோறும் பள்ளியிலிருந்து மானியம் பெறும். சென்ற ஆண்டு செலவழித்த செலவைப் பொருத்துக் கூடவோ குறையவோ மானியம் அளிக்கப்படும். நூலகங்கள் தமது பிற முயற்சிகள்மூலம் மேலும் வருவாய் பெறலாம். தண்டத்தின்மூலம் அவ்வளவாகப் பணம் வராது.

பள்ளிநூலகம் எல்லையில்லாத இலக்கியப் பணி யும் அளவில்லாத அறிவுப்பணியும் ஆற்றவேண்டுமாயின், அதன் தேவைக்கேற்ற மானியம் ஆண்டுதோறும் வழங்குவதற்குரிய இன்றியமையாத சட்டமொன்றை அரசாங்கம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் அளவுக்கு நூலகத்தில் முன்னேற்றம் காணமுடியும்.

நூலகத்தலைவர் ஆண்டு மானியத்தைப் பருவவெளியீடுகளுக்கும் நூல்களுக்கும் சரியான முறையில் பங்கிட வேண்டும். நூல்களை வாங்குங்கால் பாடநூல்களையும் கவனிக்கவேண்டும். அது மட்டுமன்று; ஒவ்வொரு பாடத்துக்குரிய மாணவர்களின் தொகையையும் பார்த்துப் பாடநூல்களை வாங்கவேண்டும். எடுத்துக்காட்டாகத் தமிழையும் வடமொழியையும் எடுத்துக் கொள்வோம். தமிழை நூற்றுக்குத் தொண்ணுாற்ருென்பது