பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உயர்நிலைப்பள்ளி நூலகம்


அவர் ஆசிரியப்பயிற்சிப் பள்ளியில் குறைந்த அளவு அடிப்படை நூலகப் பயிற்சியையாவது பெற்றிருத்தல் வேண்டும். அதற்கு வேண்டிய வாய்ப்புக்கள் ஆசிரியப்பயிற்சிப் பள்ளியில் இருத்தல் நலம். பல்கலைக் கழகத்தோடு இணைந்த ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளும் நூலகப் பயிற்சிக்கூடங்களும் ஒத்துழைத்து ஒரு பொதுத்திட்டம்- அதாவது, ஆசிரியப் பயிற்சியோடு நூலகப் பயிற்சியும் இணைந்த ஒரு திட்டம் - வகுக்குமானல், அது மிகவும் நலமாக இருக்கும். இத்தகைய நூலகப்பயிற்சி, தொடக்கம், உயர்நிலை என்ற இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் கற்பிக்கப்படல் நலமாகும். இவ்வாறு ஆசிரியப்பயிற்சியும் நூலகப்பயிற்சியும் பெறும் ஆசிரியர்களும் நூலகத்தலைவர்களும் வெளிவந்து பணி செய்யப் புகுவாரேயானல், அது சர்க்கரைப் பந்தரில் தேன்மாரி பொழிந்ததுபோல இருக்கும்.

தற்போதுள்ள அவலநிலை என்னவென்ருல், பெரும்பாலான நம் பள்ளிகளில் நூலகமே இல்லை. நூலகப்பயிற்சி பெற்றவர் அதிகமாக இல்லாமையால், மாணவர், ஆசிரியர், பெற்றேர் முதலியவருள் எவருக்கேனும் நூலகச்சிறப்பு தெரிந்திருக்கவில்லை. ஒரு பள்ளியில் சிறந்த நூலகம் ஒன்று அமைய வேண்டுமானல், அங்கே அதற்கென உயர்ந்த பட்டம் பெற்ற நூலக அதிகாரி தேவை. அன்னருக்குப் பிற உயர்ந்த ஆசிரியர்க்குத் தரப்படும் ஊதியமும், உயர்வும், பிற மதிப்புகளும் அளிக்கப்படவேண்டும். இத்தகைய உயர்ந்த நூலகத்தலைவர் ஒருவர் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டுமென்று நாங்கள் உறுதியாகக் கட்டாயப் படுத்துகிருேம். பயனில்லாத நூல்களை வாங்குவதும், பதிவதும், எப்பொழுதாவது மாணவர்க்கு நூல்களைத் தரலும், பல திங்கள் கழிந்தபின் வாங்கலுமாக இருக்குமானல், அதற்கு இத்தகைய நூலகத் தலைவர் தேவை இல்லை. நூலகம் ஓர் அறிவுக் களஞ்சியமாகச் சுடர்விடல் வேண்டும், ஆராய்ச்சிக்களமாக விளங்க வேண்டும்; பண்பாட்டு மன்றமாக மிளிர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பின் அங்கே சிறந்த நூலகத்தலைவர் அவ்வாறு பணி செய்ய