பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

25


உறுதியாக வேண்டும். சிறந்த நூல்களை வாங்கல், அவற்றின் அருமை பெருமைகளை மாணவர்க்கு விளக்குதல், அவைபற்றி ஆராயுமாறு தூண்டல், அவைபற்றிச் செய்தித்தாள்களில் வரும் மதிப்புரைகளை வெட்டி அறிக்கைப் பலகையில் ஒட்டல், மாணவர்களைப் பாடுவித்தல், நாடகம்டிப் பித்தல் ஆகிய அத்துணை வேலைகளையும் நூலகத்தலைவர் செய்தல் வேண்டும். இவைதவிரத் தனிப்பட்ட மன்றத்தாரும் கழகத்தாரும், படிப்பகத்தாரும் நூலகத்தாரும் நூலகம் அமைப்பதுபற்றி வந்து கேட்பாரானுல் அவருக்கு வேண்டிய கருத்துரைகளைத் தாராளமாக வழங்கவேண்டியது நூலகத் தலைவரது கடமையாகும். இத்தகைய பல்கலைப் பணிகளைச் செய்வதற்கு நூலகத் தலைவர்தமக்குக் கீழ் வேலை செய்வோரையும் துணையாகக் கொண்டு முன்னேடியாக இலங்க வேண்டும். ' இவ்வாறு உயர்நிலைப்பள்ளிக் குழுவின் அறிக்கையார் கூறுகின்றனர்.

மேற்கூறிய பண்பும் அறிவும் ஒரு நூலகத் தலைவருக்கு இருக்கவேண்டுமாயின் அவருக்கு அளிக்கப்படும் அல்லது கற்பிக்கப்படும் அல்லது வகுக்கப்படும் பாடத்திட்டத்தில் அதற்கேற்ற பாடங்களைச் சேர்த்தல் வேண்டும். இராபர்ட் டி லைய் என்பார் கீழ்க்கண்ட பாடத்திட்டத்தைக் குழந்தை நூலகத் தலைவருக்கும் உயர்நிலைப்பள்ளி நூலகத் தலைவருக்கும் அளித்துள்ளார்.

1.நூலகப் பணியும் அதன் தத்துவமும்.

2.குழந்தை இலக்கியம்.

3.இளைஞர் இலக்கியம்.

4.நூலகத்துக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தலும் அவற்றின் }பயனும்.

5. நூல், நூலகம் என்ற இரண்டின் அரும் பயன்களைக் கற்பித்தல். (இது பயிற்சிமுறை)