பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

27


பெரும்பயன் தரவேண்டுமானல் நூலகம் செவ்வனே அமைக்கப்பட்டு நடத்தப்பட வேண்டும்.

3.இத்தகைய நூலகத்தின் சிறப்பை அறிய அடிப்படையான அறிவு சிறிது தேவை. அந்த அறிவு தரும் திட்டத்தை அனுபவ வாயிலாகத் தயாரித்தல் வேண்டும்.


2. பள்ளிநூலகத்தின் பணிகள்


1.தலைமையாசிரியருக்கு நூலகம்பற்றிய தேவைகளை அறிவுறுத்தல்; ஆசிரியர்களின் விருப்பத்தையும் ஒத்துழைப்பையும் கவர்ந்து கொளல்.

2.பள்ளியின் உடனடியான தேவைக்கேற்ற நூல்களைப் பொறுக்குதல்.

3.நூலக அமைப்பு, தேவைகள், இருக்கைகள் முதலியனபற்றிக் கருத்துதவி செய்தல்.

4.நூல்களையும் பிற துண்டு வெளியீடுகளையும் தயாரித்துக் காட்ட்ல். அதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்துமாறு செய்தல்.

5.நூலகத்துக்கு மாணவர்களை ஈர்த்தல். நூலக ஆட்சியில் மாணவர்களையும் பங்கு கொள்ளுமாறு செய்தல்.

6.குழந்தைகளைப் பொதுநூலகப் பணியில் பழக்கல்; குறிப்பெடுக்கப் பயிற்றல்,