பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உயர்நிலைப்பள்ளி நூலகம்


3. படிப்புக்களம்


1. குழந்தைகளும் நூல்களும்


1.குழந்தைகள் எந்தெந்த நூல்களை விரும்பிப் படிக்கின்றன என்பதை உடனிருந்து கவனித்து அறிதல்.

2.குழந்தைகள் வயதுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற பொய்ப்புதினங்களை அறிதல். அறிந்ததினல் குழந்தைகளின் படிப்புக்கேற்ற நூல்களை வாங்க இயலும். பொய்ப்புதினங்கள் அல்லாத பிற நூல்களில் குழந்தைகளுக்கும் முதியவருக்கும் உரிய பொதுவான அறிவு புகட்ட வல்ல நூல்களும் இருத்தல் வேண்டும்.

3.பொதுஅறிவு, குறிப்பு, பொழுதுபோக்கு ஆகிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும் முறை - நூல்களைப் பொறுக்கும் அறிவு - இதனைப் பொதுநூலகத்தி லிருந்து பெறலாம். நூற்பட்டியல், நூலட்டவணை, மதிப்புரைகள் முதலியன பொதுநூலகத்திலிருந்து பெறப்படலாம். இந்த உதவிமூலம் குறிப்பிட்ட வயதுடையவருக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கப் பழகலாம்.

4.பொதுநூலகம், வட்டார நூலகம் என்பன பள்ளிக்கு என்ன உதவிகளைச் செய்யுமென்பதை அறிதல். குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருக்கும் போதும் வீட்டிற்குச் சென்ற பின்னரும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானல் பொது நூலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்ளல்.