பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

29


5.பொதுப்படிப்புக்குரிய மனநிலையறிவும், படிப்பில் பின்தங்கும் காரண அறிவும் சில பள்ளிநூலகத் தலைவருக்குத் தேவை.


2. பள்ளிநூலக அமைப்பு


1.நூலகம் என்பது பள்ளியின் இதயமாகும். ஆசிரியர்களும் மாணவர்களும் தத்தம் நண்பர்களோடு கலந்து உறவாடும் இடம் அது. சிருரும் பெரியோரும் வந்து வந்து அறிவுவிடாய் தீர்த்துச் செல்லும் தடாகம் அது.

2.திறந்த நூலக அமைப்பு முறையே சிறந்தது. அப்பொழுது நூலுக்கும் மாணவனுக்கும் இடையே தரகர் எவரும் இல்லை.

3.நூலக அமைப்புக்குரிய விதிகள். விளக்கிடல், வெப்பமிடல், இருக்கைகள் அமைத்தல், அணி செய்தல். நூலகநுணுக்கம். சரியான வசதியின்றி நூலகம் சீர்குலையும் சிக்கல்கள்.

4.அன்ருட வேலை விவரங்கள். ஒழுங்குமுறை விதிகள். நூலக ஆட்சியில் மாணவர் பங்கு.

5.நூல் இருப்புப் பற்றிய கணக்கு. தற்காலத்தில் நூல் கட்டும் அல்லது தைக் கும் பழக்கம், அதில் ஒரளவுக்குப் பயிற்சி, அவற்றை வழங்குதல், எண்ணிடல் ஆகியவை அறிதல்.