பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உயர்நிலைப்பள்ளி நூலகம்


4.நூலகத்தைப் பயன்படுத்தும் முறையை மாணவர்க்குக் கற்பித்தல்.

5.மாணவர் உள்ளத்தில் படிப்புவேட்கை காட்டுத் தீ எனப் பரவுமாறு செய்தல்.


5. நூலகப்பயிற்சி வகுப்பு


1.முழுநேரப் பயிற்சி என்றும், சிலநேரப் பயிற்சி என்றும் நூலகப்பயிற்சி வகுப்பு இரண்டு வகைப்படும். இவைபற்றி மூன்ரும் பிரிவில் விளக்கியுள்ளோம். இவை தனிப்பயிற்சி, குழுப்பயிற்சி, நெடுநாட் பயிற்சி, ஆசிரியர்க்கென ஒதுக்கப்பட்ட பயிற்சி என்று மேலும் பலவகைப் படும். இவை ஒவ்வொன்றும் நூலகப் பயிற்சிக்குச் சிறந்த பயன் அளிக்கும்.

2.முன்னுரைப் பயிற்சிகள் குறிப்பிட்ட பாடங்களை உடையனவாயின், மாணவர்க்கு நூலகத் துறையில் சிறப்பான அறிவைத் தரவல்லனவாகும்.

அவையாவன :-

(அ) பள்ளிப் பாடங்களுக்கும் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கும் நூலகம் செய்யும் உதவி பற்றிய அறிவு.

(ஆ) நூலகத் தலைவருக்குரிய தொகுத்தல், வகுத்தல் முதலியவற்றில் நடைமுறை அறிவு.

(இ) நூல் பொறுக்குதல், நூலகம் அமைத்தல், குறிப்பெடுத்தல் ஆகியவற்றுக்குதவி செய்தல்.