பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

33


மேற் கூறியவற்றிற்கு நடைமுறையறிவு மிக வேண்டும்.

3. எல்லாப் பாடங்களையும் கொண்ட பருவப் படிப்பு அல்லது இரண்டாண்டு பகுதிப் படிப்பு என்பது பற்றிப் பலவாறு நாம் ஆராய்தல் வேண்டும்.

செய்முறைக்கும் படிப்புக்கும் எத்தனை எத்தனை மணி நேரம் வேண்டுமென்று வரையறுத்தல் நல்லதன்று. ஏனெனில் அது படிக்கும் மாணவரைப் பொறுத்தது. சில மாணவர் செய்முறையில் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்னும் சில மாணவர் படிப்பில் அதிக நேரம் செலுத்த வேண்டியிருக்கும்.


6, முடிவுரை


அறிவுக் களஞ்சியமான நூலகத்தை நடத்தும் நூலகத் தலைவரின் பொறுப்புக்கள் அளவிடற்கரிய சிறப்புடையன். நூலகத்தலைவருக்கு இருக்க வேண்டிய திறமைகளையும் தகுதிகளையும் 'கார்னிக் குழு' நன்கு ஆராய்ந்து கூறியுள்ளது. அவையத்தனையையும் அடையப் பல நாள் பழக்கம் வேண்டும் என்ருலும் மேற் கூறப்பட்டவாறு கற்பிப்பின் அத் தகுதிகளை ஓரளவுக்குப் பெறுதல் உறுதி.

மேற்கூறிய நூலகப் பயிற்சியின் காரணம் மிகச் சிறந்த முறையில் பள்ளிநூலகத்தை அமைத்துத் திறம்பட நடத்தும் நூலகத்தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதே. பள்ளி நூலகப் பயிற்சி பெற்ற நூலகத்தலேவர் சிறந்த படிப்பாளியாகவும், அறிவாளியாகவும் இருத்தல் வேண்டும்;