பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

35


வேலே பற்றிய புள்ளிக் கணக்கு, நூல் கணக்குகள், இருப்பைச் சோதித்தல், நூலக ஆட்சியைத் திறம்படுத்தல், நூலகத்தை நன்கு நடத்தல் ஆகியவற்றை நூலகத் தலைவர் சிறப்போடு செய்தல் வேண்டும். இதற்காக உள்ளுர்ப் பொது நூலக அதிகாரியின் ஒத்துழைப்புப் பெறல்வேண்டும்.

நமது நாட்டுப் பள்ளிகளிற் பல பண வசதியின்மை காரணமாகப் பட்டம் பெற்ற நூலகத்தலே வரை ஏற்படுத்தாமல் நூலகத்தை கடத்துகின்றன. இதனல் ஆசிரியர் ஒருவரையே நூலகத்தையும் நடத்தச்செய்து வருகின்றன. அந்த ஆசிரியர் நூலகத்தை ஓரளவுக்கேனும் சிறப்புடன் நடத்தவேண்டுமானல் இங்கிலாந்திலுள்ளது போல அவரது வகுப்பு மணிகளைக் குறைக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சியோடு நூலகப் பயிற்சியும் பெற்ற ஆசிரியர் பள்ளி மாணவர் சிலரை நூலகத் துறையில் சற்று பழக்கினால், ஓய்வு நேரங்களில் அவர்களும் வந்து உதவி செய்யலாம். நூலக ஆசிரியர் ஆசிரியத் தலைவர் தகுதி அளிக்கப்படவேண்டும். காலப்போக்கில் இவருக்குப் பதிலாக ஒரு முழுநேர நூலகத் தலைவரை ஏற்படுத்தல் இன்றியமையாததாகும்.