பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்


"சிறந்த நூலகங்களைப் போல ஒரு நூலகம் நன்கு நடைபெற வேண்டுமானல் அந்த நூலகத்திலே சிறந்த நூல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருத்தல் வேண்டும். நூலகம் நடைபெறுவது நூல்களையும், படிப்போரையும், நூலகத் தலைவரையும் பொருத்ததாகும். வேண்டிய நூல்களை வாங்கித் தராமல் ஒரு நூலகத் தலைவரின் சிறந்த தொண்டினை எதிர்பார்ப்பது அறிவினமாகும். மாணவரின் எண்ணிக்கை மட்டும் நூலகத்தின் அளவினைக் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டுப்படுத்துமானல், குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கையுடைய ஒரு சிறிய பள்ளியில் நூலகத் தலைவர் என்ன தான் பெருமுயற்சி செய்தாலும் சிறந்த நூலகம் அமைந்துவிடாது. பல நூறு மாணவர் படிக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளியிலே தேவையில்லாத நூல்களைப் பலவாகக் கொண்ட நூலகம் அமைந்துவிடுதலும் உண்டு. அதனல் ஒரு பள்ளியிலே நூலகம் அமைக்கும்பொழுது, அதன் ஆசிரியரையும் மாணவரையும் கணக்கெடுத்து அதற்கேற்ருற் போன்று நூல்களை வாங்கி நூலகம் தொடங்கல் ஆகாது. அவ்வாறு கணக்கெடுத்து வாங்கினல் நூல்களின் எண்ணிக்கைதான் பெரிதாக இருக்குமே தவிர நூலின் தரமோ, திறமோ பெரிதாக இருக்காது. எனவே பள்ளியின் அளவைப் பொருத்து நூலகம் அமைவதில்லை. அந்த நூலகத்திலே இன்றியமையாத குறிப்பு நூல்கள், பாட நூல்கள் புதினம் போன்ற பொதுநூல்கள் ஆகியன இருக்கும். முதன் முதலாக நூலகம் தொடங்கும்பொழுது இத்தகைய நூல்கள் வாங்குவதற்கே பணத்தில் ஒரு பங்கை முதலில் செலவழிக்க வேண்டும். இவ்வாறு ச்டாட் (Stott) கூறுவது நோக்கத்தக்கது.

இத்தகைய துறையிலே மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை கார்னீக் அறிக்கை, பள்ளி நூலக மன்ற அறிக்கை, நூலட்டவணை என்பவை. இவற்றுள் முதலிரண்டு