பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்

37


அறிக்கைகள் இங்கிலாந்திலே தயாரிக்கப்பட்டவை. மூன்ருவது அறிக்கை அமெரிக்காவில் உருவானது. இந்த மூன்றும் உயர்நிலைப் பள்ளியிலே அமைக்கும் நூலகத்தின் அமைப்பு, அதிலே இருக்க வேண்டிய நூல்கள் ஆகியன பற்றிக் கூறுகின்றன.


இனிமேல், நூலகத்திலே இருக்கவேண்டிய நூல் வகைகள் பாட நூல்கள் ஆகியவை பற்றிப் பார்ப்போம். எல்லா நூல்களையும் ஒரேயடியாக வாங்கவேண்டியதில்லை; கொஞ்சம் கொஞ்சமாக ஓராண்டு அல்லது ஈராண்டுகளுக்குள் வாங்கினால் போதும். இவ்வாறு முதன்முதலாகத் தொடக்கத்தில் வாங்கப் பள்ளியின் இருப்புப் பணம் செலவிடப்படல் வேண்டும்.

முதன்முதலாக வாங்கவேண்டிய நூல்களை மூன்று வ.யாகப் பிரிக்கலாம்:- குறிப்பு நூல்கள், நாவல் போன்ற பொழுது போக்கு நூல்கள், சிறந்த நூல்கள். 'இவ்வாறு மூவகைப்பட்ட நூல்களைத் தெரிந்து வாங்குவதன் நோக்கம் மாணவர்க்கு அறிவின் பரப்பையும், ஆழத்தையும், அறிவுத் துறையின் பல்வேறு பிரிவுகளையும் காண்பிக்கவேண்டும். அதஞல் மாணவர்க்கு கிணற்றுத் தவளை மனப்பான்மை ஏற்படாது ' என்று ச்டாட் கூறுகிருர். இங்ங்னம் தேர்ந்தெடுத்து வாங்கும் நூல்கள் பாடத் தொடர்பானவையாக மட்டும் இருந்தால் நல்லதன்று. ஏனெனில் மாணவர்க்கு வெவ்வேறு வகையான நூல்களின் மேல் செல்லும் கருத்தோட்டம் உண்டு. அதனை வளர்க்க அவை பயன்படா என்பதால் என்க இதனலேயே இன்றைய பள்ளிப் பாடத்திட்டமே அகலப்படிப்புக் குரியதாகவும், பல்சுவைப் பாடமாகவும், வாழ்க்கைக்கு உதவு வதாகவும் இருக்குமாறு தயாரிக்கப்படுகிறது. நூலகத்துக்கு வேண்டிய குறிப்பு நூல்கள் நம் நாட்டு மொழிகளில் இல்லாததினாலேயே சிறந்த நூல்கள் போதியளவு கிடைக்கவில்லை.

ஒவ்வொரு நூலகத்திலும் அறிவியல், கலையியல், நுண்கலை, பொதுமை ஆகிய துறைகளிலே உள்ள சிறந்தநூல்கள் சிலவாவது