பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்

39


மேலே வகுத்த அட்டவணையில் கூறப்பட்டவை மட்டுமே வாங்கவேண்டும் என்பதில்லை. காலப்போக்கில் தோன்றும் புத்தம் புதிய கலைநூல்களையும் வாங்கி வைக்கலாம். இவ்வாறு துறை வகுத்துத் துறைதோறும் நூல்கள் வாங்காவிடில் நூலகம் சிறந்த முறையில் அமையாது. அதனால் நூலக ஆண்டு மானியத்தைத் துறைக்கு இவ்வளவு என்று பங்கீடு செய்து அந்த அந்தத் துறையில் கிடைக்கும் சிறந்த நூல்களை வாங்கிவைத்தல் வேண்டும்.

நூலக மானியத் தினை இரண்டாகப் பிரித்து ஒரு பங்கைப் பாடநூல்கள் வாங்குவதற்கும், எஞ்சிய ஒரு பங்கைப் பிற நூல்கள் வாங்கவும் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவாக முன்னதற்கு முக்கால் பங்கும், பின்னதற்குக் காற்பங்கும் செலவழிப்பது நடப்பு இயல்பு. பாட நூல்களுக்காக ஒதுக்கப் பட்ட பணம் மேலும் பாடவாரியாகப் பங்கு போடப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகத் தமிழ் அதிக மாணவர்களாலும், வடமொழி ஒரிரு மாணவர்களாலும் படிக்கப்பட்டால் அதற் கேற்றவாறே பணமும் செலவழிக்கப்படும். பாட ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் தொகை, வயது, விருப்பம், அறிவு நிலை ஆகியவற்றுக்கேற்ப நூல்களைக் குறித்து நூலகத் தலைவருக்கனுப்புவர். அவர் அதனை வாங்கி, நூல்களின் விலை, வெளியிடப்பட்ட தேதி, பதிப்பகம், பதிப்பு, ஆகியவற்றைக் குறித்தல், ஒதுக்கப் பட்ட பணத்துக்கேற்ப நூல்களைக் குறைத்தல் அல்லது கூட்டல் முதலிய அத்துணை வேலைகளையும் நூலகத் தலைவர் செய்வார். இவ்வாறு செய்துமுடித்த பின்னரே நூல்கள் வாங்க ஆணைகள் வாங்கப்படும். ஆனல் பள்ளியிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, ஆசிரியர்கள் இத்துணை விவரங்களை உணருவதில்லை; தெரிந்துகொள்ளுவதும் இல்லை. பெரும்பாலான கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் தங்கள் துறையிலே தங்கள் பாடங்களைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களைப் பற்றியோ, அவற்றின் கருத்துக்களைப் பற்றியோ ஒன்றும் தெரிவதில்லை. அதைேடு நூல்களின் இன்றியமையாமையைத் தெரியாமல்