பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்

43


'ஆடவரும் பெண்டிரும் செம்மறியாட்டுக்கூட்டமன்று, ஒவ்வொருவரும் சொந்தமாகச் சிந்தித்து வாழும் உரிமை வீரர் ஆவர். எனவே பெரியவரைப்போன்று அவர்தம் தனிமனப் போக்கையும் அறிதல்; அதற்கேற்ற மதிப்புக் கொடுத்தல் இன்றியமையாததாகும். பள்ளி மாணவர்கள் எளிதில் கவரப்படுவார்கள். எனவே, அவர்களை நல்வழிப்படுத்தல் மிகஎளிதாகும். பெரியவர்களை நீங்கள் இதைத்தான் படித்தல்வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதுபோலச் சிறுவர்களையும் குறிப்பிட்ட வற்றையே படித்தல்வேண்டும் என்று நாம் கட்டாயப் படுத்தல் இயலாத ஒன்று என்பது மட்டுமன்று; அது அறிவீனமாகும். '

புதுமையின் காரணமாகச் சில நூல்களைச் சில சிறுவர்கள் எடுத்துப் படிப்பர்; இன்னும் சில சிறுவர்கள் பெரியவர்கள் எடுப்பதினால் சில நூல்களை எடுத்துப் படிப்பர்; அது சிறுவரின் இயல்பு. அது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவரிடமும் படிந்து கிடக்கும். ஆளுல் வயது வந்த மாணவர்கள் அவ்வித இயல்புடையவரன்று. எனவே அவர்தம் சுவைக்கேற்ற நூல்கள் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தனிப்பட்டோருக்கு நூலகத் தலைவர் நூல் தேர்ந்தெடுத்துத் தருதல் தனிச்சுவை உதவி எனப்படும்.

'மாணவர்தம் அறிவைப் பெருக்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்த அளவு ஒரு பாட மணியையாவது ஒதுக்கி அதனை மாணவர்கள் தம்விருப்பம் போலப்பயன்படுத்துமாறு செய்தல் வேண்டும். இத்தகைய முறை வெற்றி பெற வேண்டுமாளுல் அதற்குரிய வசதிகள் வேண்டும் என்பதை வற்புறுத்த