பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உயர்நிலைப்பள்ளி நூலகம்


வேண்டியதில்லை.' இவ்வாறு உயர்நிலைப்பள்ளிக் குழு கூறுகிறது.

இந்தப் பாடமணியை நூலகமணி என்று அழைக்கலாம். இந்த நேரத்தில் பாட ஆசிரியரும் மாணவர் குழுக்களும் நூலகத் தலைவரின் முழு உதவி பெற்றுச் செயல்பட வேண்டும். ஒரு வகுப்பு மாணவர்களே முதலில் பல குழுக்களாகப் பிரித்தல் வேண்டும். பின்னர், அந்தக் குழு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடத்தைப் பற்றித் தனித்தனியே, நூலகத்திலுள்ள கருத்தரங்கத்தில் தமக்குள் ஆராய்தல் வேண்டும். ஆராய்ச்சிக்கு வேண்டிய நூல்களை நூலகத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆராய்ந்த பின்னர் ஆராய்ச்சிகளைக் கட்டுரைகளாக எழுதுதல் வேண்டும். ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னரும் அந்தக் கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள், அவைபற்றிய சிறு குறிப்புக்கள் ஆகியவை பற்றிய ஒர் அறிக்கை சேர்க்கப்படல் வேண்டும். நூலகத் தலைவர் அதன் பின் அத்துணைக் கட்டுரைகளையும் சேர்த்து ஒழுங்குபடுத்தி ஒரு ஆராய்ச்சித் தொகுதியாக்கல் வேண்டும். இறுதியில் அவர் அவற்றைத் தட்டெழுத்தினால் அச்சடித்து மானவரிடம் காண்பித்துவிட்டுச் சேர்த்து நூலாக்கி நூலகத்தில் வருங்கால மாணவரும் கண்டு களிக்குமாறு வைத்தல் வேண்டும்

இவ்வாறு மாணவர் குழுக்கள் ஆராய்ந்து தயாரிக்கும் கட்டுரைகள் அவர்தம் பாடம் பற்றியவையாக இருத்தல் வேண்டும். இத்தகைய குழுவேலே மூலம், கூட்டாகச் சேர்ந்து பணியாற்றும் உள்ளமும், குறிப்பு நூல்களைப் பயன்படுத்தும் திறமையும் மாணவர்க்குத் தாமாகவே ஏற்படுகின்றன.

இத்தகைய குழுக்களுக்கு நூலகத்தலைவர், நூல்களைத் தயாரிக்கும் முறையை - முன்னுரை, மதிப்புரை, பொருளடக்கம் அரும்பொருளகராதி, சொல்லகராதி, நூலகராதி ஆகியவை அமைக்கும் முறையை மாணவர்க்குக் கற்பித்தல் வேண்டும் நூல் எழுதுவதன் சிறப்போடு நூலை அழகுபடுத்துவதன் சிறப்பினையும் அறிந்து செயல்படல் வளரும் மாணவர்க்கு அறிகுறி ஆகும்.