பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. நூலக ஆட்சி

நூலகம் சிறக்க வேண்டுமானல் நூலகத்தலைவர் சில பணிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்து வரவேண்டும். அப்பணிகள் வருமாறு:

1.நூல்களை வாங்க ஆணைதருதல், வாங்கல், விலைப் பணத்தைத் தரல்.

2.நூல்களை நூலடங்கலில் பதிவு செய்தல்.

3.நூல்களை தொகுத்தல். (Cataloguing )

4.நூல்களை வகைப்படுத்தல். (Classification)

5.படிப்பதற்கு நூல்களைத் தயாரித்தல்.

6.எடுத்துச் செல்வோரது பதிவேடு அல்லது நூல் வழங்கும் ஏட்டில் பதிதல்.

7.கணக்கெடுப்பு அல்லது நூல்களைச் சரி பார்த்தல்.

8.சிதைந்த நூல்களைச் சீர்படுத்தல்.

9.தூசி போக்கல், தூய்மை செய்தல், நூல்களை ஒழுங்குபடுத்தல்.

10.பருவமலர்களை அழகுற எடுத்துவைத்தல்.

11.நூல் கண்காட்சிக்கு உரியன தயாரித்தல்.

12.புள்ளிவிவரங்கள் தயாரித்தல்.