பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூலடங்கலில் பின்வரும் விவரங்கள் காணப்படும்:—

1. நூல் வாங்கிய நாள்.                                 2. பதிவெண்.

3. நூலாசிரியர்.                                            4. நூலின் பெயர்.

5. பதிப்பாளர்.                                             6. நூல் வாங்கிய இடம்.

7. விலை.                                                    8. நூலின் வரிசைப்படுத்திய

9. குறிப்பு.                                                                                  எண்.

பதிவேட்டிலே பல வகையுண்டு. அவை வருமாறு:—

1. நன்றாகக் கட்டடம் செய்யப்பட்ட பேரேடு.

2. தனித் தாள்களாலாகிய ஏடு.

3. அட்டைகளாலாயது.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை. இவற்றில் எதை வைத்துக் கொண்டாலும், நல்ல முறையில் அதனை வைத்துக் கொள்ள வேண்டும்.

நூல்கள் பதியப்பட்ட பின்னர் அவற்றிலே நூலக முத்திரை பதிக்கப்பட வேண்டும். முத்திரையில் நூலகத்தின் பெயர் இருத்தல் வேண்டும். அதனை நூல்களின் முக்கியமான பக்கங்களில் பதித்தல் வேண்டும்.


3. வகுத்தல்

அடுத்துச் செய்ய வேண்டியது. பதியப்பட்ட நூல்களை எல்லாம் வரிசையாகவும் ஒழுங்காகவும் அழகாகவும்