பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பொருட்பாகுபாடுகள், வளரும் அறிவியல் துறைகள், அவற்றின் உட்பிரிவுகள் ஆகிய அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து ஆராய்ந்து, பின் தெளிவு கண்டு ரங்கனாதன் தமது வகைப்படுத்தும் முறையை வகுத்துள்ளார். எந்தப் புதிய துறைக்கும், அதன் உட்பிரிவுகளுக்கும் வகைப்படுத்தும் எண்களை 'கோலன்' முறையில் யாரும் எளிதில் எவ்வித சிரமமும் இன்றி வகுத்துக் கொள்ளலாம். சுருங்கக் கூறின் 'டூயி' முறை தெளிந்த நீரோடையைப் போன்றதாகும்; 'கோலன்' முறை ஆழ்ந்து அகன்ற கடலைப் போன்றதாகும். இவ்விரு முறைகளைப் பற்றிய விளக்கங்கள் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த வகைப்படுத்தும் முறையும் பின்வரும் இயல்புகளைக் கொண்டிலங்கினல்தான் அது சிறந்து விளங்க முடியும்.

1. இவ்வுலகில் காணும் பொருட்பாகுபாடுகள் அனைத்திற்கும் எண்களை உடையதாக அமைந்து இருக்க வேண்டும்.

2. பொருட்பாகுபாடுகள் முரண்பாடின்றிப் பொருத்தமாக விளங்குதல் வேண்டும்.

3. பொருள்களின் இயற்கைத் தன்மைக்கேற்ப அவை பிரிக்கப்பட வேண்டும். மேலும் முடிந்த அளவிற்கு வகைப்படுத்தும் முறை நுட்பமும் ஆழமும் பொருந்தியதாக இருத்தல் வேண்டும்.

4. எளிதில் நினைவிற் கொள்ளத் தக்கதாகவும், அளவிற் சுருங்கியதாகவும், உள்ள குறியீட்டினை (எண்) உடையதாக இருத்தல் வேண்டும்.