பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

53


பொருளுக்கேற்ப வகைப்படுத்த வேண்டும். நூலக வகைப்படுத்தும் அகராதி எவ்வளவுதான் சிறந்ததாக இருந்த போதிலும் வெறும் அகராதி மட்டும் ஒரு நூலை வகுத்தற்குப் பயன்படாது. எனவே, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட எண் முறைகள் எப்பொழுதுமே சரியாக இருக்கும் என்று எதிர்பார்த்தல் நன்றன்று. ஏனெனில் கருத்து நாளும் புத்தம்புது கிளைவிட்டும், விழுது விட்டும் வளரவல்ல ஆலமரமாகும். அதற்கேற்ப நூல்கள் பல்வேறு வகையாய்ப் பிரிதல் இயல்பு. எனவே, ஒரு நூலுக்கு எண்தந்து வகைப்படுத்தும்பொழுது அதன் போக்கையும், வாக்கையும் ஆராய்ந்து நோக்கி பார்த்தல்வேண்டும். அவ்வாறின்றி நூலகத்தலைவர் சோம்பேறியாக இருந்து கவலையின்றி ஏதாவது எண் தந்து ஒரு நூலை வகைப்படுத் தி அதனேடு தொடர்புடைய பிறநூல்களைச் சேராத ஒரு வகையில் வைத்து விடுவாராளுல் அந்த நூலை யாரும் பயன்படுத்த முடியாது போய்விடும்.

எடுத்துக்காட்டாகக் காலஞ் சென்ற வங்கக் கவிஞர் தாகூரின் 'மனிதன் யார்?' என்ற நூலை எடுத்துக்கொள்வோம். இது மனிதனைப் பற்றித் தாகூர் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுதியாம். நூலகத்திலே சொற்பொழிவு நூல்கள் ஒவ்வொரு வகையிலும் உண்டு. அதனை அறியாமல் நூலின் பெயரை மட்டும் பார்த்து அதனை வகைப்படுத்தினல் பெரும்பாலும் தாகூரின் நூல் 'உடலியல்' என்ற வகையில் அடங்கும். ஆனல் உடலியல் கலைக்கும் தாகூரின் நூலுக்கும் போன பிறவியிற்கூடத் தொடர்பு இருந்திருக்காது. எனவே, நூலின் போக்கையும் வாக்கையும் நோக்கிளுேம் என்ருல் தாகூரின் நூல் தத்துவ வகையிற் சேர்க்கப்படல் வேண்டும்.

நூல்கள் சரியான இடத்தை அடையவேண்டுமானல், முதலில் அதன் பொருளை நோக்கல் வேண்டும். அதன்பின் அகராதி நோக்கி அதற்குரிய இடத்திலோ, வகையிலோ சேர்க்கப்