பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உயர்நிலைப்பள்ளி நூலகம்


படல் வேண்டும். இதனல் தவறு நேர்ந்தாலும், அகராதி நீக்கிவிடும். பெரும் பிரிவிலே தவறு ஏற்படுமானல் அதனல் எல்லாம் பாழாகிவிடும். துணைப்பிரிவிலோ உட்பிரிவிலோ தவறு ஏற்படு மானல் அதனல் அத்துணைக் குழப்பம் ஏற்படாது.

ஒரு நூல் அதற்குரிய இடத்தை அடைவது நூலகத் தலைவர் கையிலுள்ளது. அவர் அனுபவமும் நூலக அறிவும் நிரம்பியவராக இருப்பவரானல் ஆறஅமரச் சிந்தித்து நூலைப் படித்துப்பார்த்து, அகராதியையும் அட்டவணையையும் நோக்கிப் பொறுமையாக நூலை அதற்குரிய வரிசையில் சேர்ப்பார். சிலபொழுது ஒரு நூல் சிறந்ததொரு இடத்தில் வைக்கப்பட்டு, அதனேடொத்த பிற நூல்கள் பிற இடத்தில் வைக்கப்பட்டிருக்குமானல், அந்த நூல்கள் புதிய எண் வரிசை அளிக்கப்பட்டு, அந்த நூலோடு சேர்க்கப்படும்.

'டூயி' என்பவர் தமது நூலின் முன்னுரையிலும், 'பெரிவீகர்' என்பவர் தமது "வகுப்புக்கொரு முன்னுரை' என்ற நூலிலும், 'மெற்றில்' என்பவர் 'வகுப்பாளர்க்குரிய விதிகள்' என்ற நூலிலும், நூல்களை வகைப்படுத்தி வைப்பதற்குரிய முறைகளையும் விதிகளையும் கூறியுள்ளனர். அவை பின்வருமாறு :-

1. நூலின் வாக்கையும் போக்கையும் நோக்கி வகுத்தல் வேண்டும். நற்றிணையின் மொழி என்ற நூல் நூலகத்துக்கு வந்துள்ளது என்று வைத்துக்கொள்ளுவோம். அதனை எப்படி நூலகத்திற் சேர்ப்பது? முதலில் அஃது ஒர் இலக்கியம் என்பதை மனதிற்கொள்ளவேண்டும். இலக்கியத்திற்குரிய எண் ஒன்பது (9) என்று வைத்துக்கொள்வோம். பின்னர் நூலின் போக்கைப் பார்த்தல்வேண்டும். சிலர் நற்றிணையின் இலக்கியத் திறனை ஆராய்ந்து எழுதியிருப்பர். சிலர் நற்றிணையில் வரும் செடிகளை