பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

57


5. இப்பொழுது வகைப் படுத்தியிருக்கும் வகை மாற்றப்பட வேண்டியதாக இருக்குமானல், அகராதியிலும், பிற குறிப்பிலும் அதனைப் பற்றிய ஒரு குறிப்பை எழுதி வைத்தல் வேண்டும்.

6. எந்தவகையிற் சேர்த்தால் பெரும்பாலான மாணவர்க்குத் தெரியவருமோ அந்த வகையில் நூலைச் சேர்த்தல்வேண்டும். எடுத்துக்காட்டாகத் திரு. வி. க.வின் வாழ்க்கை வரலாற்றைக் கொள்வோம். இந்திய விடுதலைப் போரினை அறிய இந்த நூல் மிகவும் பயன்படும். இந்த நூல் நாட்டு வரலாறு, வாழ்க்கை வரலாறு என்பவற்றுடன் தொடர்புடையதாக இருந்தபோதிலும் அவற்றிற் சேர்ப்பதைவிட 3232 என்பதிற் சேர்த்தல் மிகுந்த பயனுடையதாகும். இந்த எண் 'அரசியல் போராட்டம்' என்ற பொருளுக்கு உரியதாகும்.

7. ஒரு நூலின் பொருள் நாட்டின் அடிப்படையில் பேசப் பட்டிருக்குமாயின் முதலில் பொருள், பின் நாடு என்ற வரிசையில் வகைப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டுக் கணிதம் என்பது நூலாயின் அதனை முதலில் கணித வகுப்பிலும் பின் தமிழக வகுப்பிலும் சேர்த்து இரண்டு எண்களையும் முன்னும் பின்னுமாகத் தரல்வேண்டும். 510.954.

8. இரண்டு பொருளைப் பற்றிய ஒரு நூலில் ஒன்றின் மீது மற்றென்று ஆதிக்கம் செலுத்துமானல் ஆதிக்கம் செலுத்தப்படுவதன்கீழ் அந்த நூலினைச் சேர்த்தல்வேண்டும். வடமொழியில் திராவிடக் கூறுகள் என்பது நூலாயின் அதனை வடமொழி நூல்களோடு சேர்த்தலே அறிவுடைமையாகும்.

மேற்கூறியவற்றைப் பின்பற்றுவதோடு கீழ்வருவனவற்றையும் பின்பற்றல் வேண்டும்.