பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக ஆட்சி

59


காகவும் தெளிவாகவும் எழுதுக.

10. நாள்தோறும் பெரும் பிரிவுகளிலே நூல்களைச் சேர்த்தலும், பின்னர் பொய்ப்புதினங்களைப் பிரித்தலும் செய்யவேண்டும்.

நூல்களை அடுக்கல்

ஒரு நூலுக்குப் வகைப்படுத்தும் எண் தந்தபின் அது முன் கூறியது போலத் தலைப்புப் பக்கத்தின் பின் குறிப்பிடப்படும். ஒரு பொருளைப் பற்றியே பல நூல்கள் இருக்கும். பல ஆசிரியர்களால் எழுதப்பட்டவையாகவும் இருக்கலாம். அவ்வாறிருப்பின் அவற்றிற்கெனத் தனி எண்கள் தரல் வேண்டும். அவை 'நூல் எண்கள்’ (Book Numbers) ஆகும். அந்த எண் முறைப்படி வரிசையாக அந்த நூல்கள் அலமாரியில் அடுக்கப்பட வேண்டும். இந்த எண்கள் எண்ணுகவோ எழுத்தாகவோ இருக்கலாம். பெரும்பாலும் 'கட்டர்' கூறிய ஆசிரிய அகரவரிசை எழுத்து முறைகள் இதற்குப் பின்பற்றப்படுகின்றன.

எண் முறை
954                                      954                                      954

R65                                      R65 - 1                                R6 5-2

இவற்றில் R என்பது ஆசிரியரின் எழுத்து. 1, 2, என்பன வரிசை எண்கள்.

எழுத்து முறை
954                                     954                                         954

R65N                                  R65S                                        ᎡᏮ 5Ꭲ