பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உயர்நிலைப்பள்ளி நூலகம்


R என்பது ஆசிரியரின் எழுத்து. N, S, T, என்பவை நூற்பெயரின் முதலெழுத்துக்கள்.

ஒவ்வொரு நூலுக்கும் இத்தகைய நூல் எண் உண்டு. அதன்மூலம் அந்த நூல் அலமாரியில் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். இத்தகைய எண்கள் நூலின் குறுக்கில் கீழே ஒட்டப்பட்டிருக்கும் வட்டமான தாள்நறுக்கில் குறிக்கப்படும்.

சில நேரங்களில் அலமாரிகளை மாற்றி மாற்றி வைத்தல் உண்டு. எல்லாராலும் படிக்கப்படும் நூல்கலுள்ள அலமாரிகள் கண்ணெதிரே வைக்கப்படும். பொதுவாக எல்லாரையும் கவருவது புதினமே. அதனல் புதின அலமாரி பலரும் பார்க்கும் இடத்திலே வைக்கப்படும். மேலும் ஒன்றிற்கொன்று தொடர்புடைய அலமாரிகள் அடுத்தடுத்து வைக்கப் படும்.

அலமாரி அமைப்பு

வாங்கிய நூலைக் கவனமுடன் அலமாரிகளில் வைப்பதற்கு என உள்ள சில முறைகளை நாம் தெரிந்தாக வேண்டும். நூலகத்தின் வாயிலில் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிக்கை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அத்துறைகள், நூல் வழங்கும் பகுதி, குறிப்பு நூலகம், படிப்பகம், நூல்கள் இருக்கும் பகுதி, படங்கள் உள்ள பகுதி போன்றவையாகும். நூல் வழங்கும் பகுதி, குறிப்பு நூலகம் என்ற இரண்டும் இருக்கும் இடம், அவை நடைபெறும் முறை ஆகியவை பற்றிய செய்திகள் விளக்கமாக அறிக்கைப் பலகையில் ஒட்டப் பட்டிருக்க வேண்டும். நூல்கள் எல்லாம் எண்கள் தரப்பட்டவையாக இருப்பதால் அவற்றைப் பற்றியும் விளக்கம் வேண்டும்.