பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

61


பிற குறிப்புக்கள் வருமாறு:

1. பெரும் பிரிவு பற்றிய குறிப்புக்கள்.

2. தலைப்புக்குறிப்பு அல்லது ஒவ்வொரு அலமாரியிலும் உள்ள நூல்களின் தலைப்புக்கள் பற்றிய குறிப்புக்கள்.

இவற்றில் பெரும் பிரிவுக் குறிப்பு என்பது நூல்களினுடைய பொருட்பாகுபாட்டின் பெரும் பிரிவு, அதன் உட்பிரிவு ஆகியவற்றைக் காட்டுவதாகும். இது அலமாரிக்கு அருகில் தொங்கவிடப் பட்டிருக்கும். தலைப்புக் குறிப்பு என்பது அலமாரியின் ஒவ்வொரு தட்டின் குறுக்குப் புறத்திலும் ஒட்டப்பட்டிருக்கும். அதிலே தொடக்க எண், தலைப்பு எண் ஆகியன காணப்படும். இவை தவிர அலமாரிகளிலுள்ள நூல்களின் பொருளை நெட்டு வசத்தில் சுட்டும் குறிப்புக்களுமுண்டு. ஆனால் நூலகக் குறிப்புக்கள் ஓரளவே இருக்க வேண்டும். அளவுக்கு மீறினல் ஒரே குழப்பந்தான் மிஞ்சும். இதனல் நூலகத்திற்கு வருவோர் மிகவும் சிரமப்படுவர்.

நூலட்டவணை

ஒரு பள்ளி நூலகத்துக்கு எத்தகைய நூலட்டவணை தேவை? நூல்களைப்பற்றி விளக்கும் ஒரு அட்டவணை மாணவர்க்கு பெரிதும் பயன்படும். நூலகம் பெரிதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் காலத்தில் அது பயன்படும் விதத்தைப் பொறுத்தே அதன் சிறப்பு அமையும். வேண்டிய நேரத்தில் நூல் கொடுக்க முடியாத ஒரு நூலகம் நூலகமன்று.

பள்ளிப் பிள்ளைகள் நூலகத்தில் அதிகமாக நுழைந்திருக்க மாட்டார்கள்; நூலக அனுபவம் அவர்கட்குக் குறைவாகவே இருக்கும். நூலகம் என்றலே அது என்ன என்று கேட்கும் பிள்ளைகளே அதிகம். இந்த உண்மையை மனத்திற் கொண்டே