பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூல் அட்டவணை தயாரிக்க வேண்டும். அந்த அட்டவணையின் ஒவ்வொரு வரியிலும் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தயாரிக்கப்பட்டது என்ற கருத்து சுடர்விடல் வேண்டும். அந்த அட்டவணையில் அவர்தம் பாடநூல்களின் பகுதிகளை நிரல் படுத்திக் கூறவேண்டும்; பிறகு சேரன் செங்குட்டுவன், கரிகாலன் ஆகியோர்தம் வீர வரலாறுகளை எடுத்துக் கதைபோலக் கூறும் பகுதிக்கு ஈர்த்துச் செல்ல வேண்டும். பள்ளிப் பிள்ளைகளின் தேவைகளையறிந்து அட்டவணை தயாரிப்பின் அவர்க்கு அது பெரிதும் பயன்படும். அதனல் பிள்ளைகட்குப் பெரிதும் பயன்படும் அட்டவணை தயாரிப்பதே முதல் வேலை. அவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டவணை பிள்ளைகட்கு மட்டும் அல்லாமல் ஆசிரியர்க்கும் பயன்படக் கூடியதாகவும் பிற நூலக வழிகாட்டிகளுடன் தொடர்புடையதாகவும் இருப்பின் பிள்ளைகள் குழப்பமின்றிப் பயன்படுத்துவர்.

அட்டவணை பாடத் திட்டத்துடன் இணைந்த ஒன்ருசஇருக்க வேண்டியிருப்பதால் அட்டவணை தயாரிப்பாளர் பாடத்திட்டத்தையும் படித்த வ.ரா.க இருத்தல் வேண்டும். அட்டவணையை வகுப்புத் தொடங்கு முன்பே தயாரித்தல் வேண்டும். பின் தயாரிக்க வேண்டுமானுல் போதுமான நேரம் இருக்காது.

நூலகம் பற்றி எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமானல் ஒரு சிறந்த அட்டவணை தேவை. நூலகத்திலே நூல்கள் ஒழுங்காக வகுத்தும் தொகுத்தும் உரிய இடங்களில் சிறந்த முறையில் வைக்கப் பட்டிருக்குமானல், அவை பற்றிய அட்டவணை மாணவர்க்குப் பெரிதும் பயன்படும்.

அட்டவணை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டியவை பின்வருமாறு:-

1. மாணவர்க்கு நனகு பயன்படும் விதத்தில் அட்டவணை தயாரித்தல்.