பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

63


2. சிறந்த அமைப்புடன் அட்டவணை தயாரித்தல்.

3. அட்டவணையில் தற்காலம்வரை விவரம் இருக்க வேண்டும்.

4. அடிக்கடி பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும்.

5. கைக்கடக்கமாகச் செய்தல்.

6. மாணவர்களின் படிப்பை அறிந்து தயாரித்தல்.

இனி அட்டவணையினுள் நுழைவோம். அட்டவணையிலே ஒவ்வொரு நூலின் ஆசிரியர், தலைப்பு, பொருளடக்கம், குறுக்கு மேற்கோள்கள் ஆகியன இடம் பெறும். ஆனல் எல்லா நூல்களுக்குமே இத்தனையும் இருக்காது. சிலவற்றுக்கு இவற்றுள் ஒன்றிரண்டே தேவையாக இருக்கும். இலக்கிய வகுப்பைச் சேர்ந்த நூல்களுக்கு ஆசிரியர் பெயர், தலைப்பு ஆகிய இரண்டே பதியப்பட்டிருக்கும்.

இளங்கோ அடிகள் :- சிலப்பதிகாரம்.

கம்பன் :- இராம காதை.

ஆனால் வரலாறு, மருத்துவம் போன்ற நூல்களுக்கு ஆசிரியர், நூலின் பெயர் ஆகியவற்றேடு பொருட்பெயரும் தேவைப்படும். ஏனெனில் இவற்றில் ஆசிரியரின் பெயரையும், நூலின் பெயரையும்விட இங்கு நூலின் உட்கிடக்கையே முக்கியமாகும். இந்த மூன்றேடு தொடர்பான பிற நூல் பெயர்களும் குறித்தல் பெரும்பயன் தருவதாகும். அதனல் அட்டவணை சிறப்பதோடு படிப்பார்க்கும் பயன் அதிகம் ஆகும்.

அட்டவணைப் பதிவுகள் மூவகைப்படும்.

1. ஆசிரியர் பெயர்ப்பதிவு - இதனல் ஆசிரியரால் எழுதப்பட்ட நூல்களில் நூலத்திலுள்ளவை