பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பற்றித் தெரியலாம். மேலும் அவரோடு இணைந்து எழுதும் பிற ஆசிரியர்கள் பற்றியும் அறியலாம்.

2. துணைப்பதிவு - இதன்மூலம், நூலின் ஆசிரியர், துணையாசிரியர், நூலின் பெயர், நூலின்பொருள் ஆகியவற்றில் எதைச் சொன்னலும் நூலைப் பெறலாம்.

3. குறுக்கு மேற்கோள் பதிவு- இதன்மூலம் அட்டவணையில் மேற்கொள்ளப் பட்டிருக்கிற பதிவு முறையையும், வகுக்கப்பட்டுள்ள பெரும் பொருட்பாகுபாடுகளையும், உட் தலைப்புக்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

முதலிரண்டு பதிவுகள் நூலின் வகைப்படுத்திய எண்களைப் பெற்றிருக்கும். அதனல் நூல் எந்த அலமாரியில் எத் தட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


அட்டவணையின் குறிக்கோள்


1. நூலாசிரியர், நூல், நூலின் பொருள் ஆகிய வற்றுள் ஒன்றை அறிதல்.

2. நூலகத்திலுள்ளவை எவை என்பதைப் பதியப் பட்டுள்ள நூலின் பெயர், நூற்பொருள், ஆசிரியரின் பெயர் ஆகியவற்ருல் அறியலாம்.

3. நூலின் பதிப்பு, நூல் இலக்கியமா? தொகுதியா? என்பதை அறிதல்.