பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக ஆட்சி

65


அட்டையில் (Card form) பதியும் முறை முடிவு செய்யப்பட்டுப் பழக்கத்தில் உள்ளது. நூலைப்பற்றிய முக்கிய விவரங்கள் அட்டவணை அட்டைகளில் பதியப்பட வேண்டும். வகைப்படுத்திய எண், நூல் எண் இவற்றின்மூலம் நூலின் இருப்பிடத்தை எளிதில் அறியலாம்: நூலே இருப்பிடத்தில் எளிதில் சேர்க்கவும் செய்யலாம்.

915.4 வகைப்படுத்திய எண் 1 - 圖 - N.36 நூல் எண் | குறிப்பெண் ஆசிரியர் இருவகைப்படுவர். மேலை நாட்டு ஆசிரியராயின் அவருக்குப் பட்டப் பெயர் இருக்கும். கீழை நாட்டு ஆசிரியர்க்குப் பட்டப்பெயர் இருத்தல் அரிது. கூட்டாசிரியர் என்பவரைச் சேர்த்தால் ஆசிரியர் மூவகைப்படுவர்.

மேலே நாட்டு ஆசிரியரைப் பதியும் முறை:

பெயர் : கோலன். ஏ. சி.

பட்டப்பெயர் : கோலன்.

முதலெழுத்துக்கள் : ஏ. சி.

கீழை நாட்டு ஆசிரியரைப் பதியும் முறை:

பெயர் : சுப்பிரமணியம்

பட்டப்பெயர் : வடதலைசேரி

சோமசுந்தர பாரதியார்:-

பெயர்: சோமசுந்தரம்

குடும்பப் பெயர் : பாரதியார்

மேலை நாட்டு ஆசிரியர் பாணியில் கீழை நாட்டு ஆசிரியர்: