பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பாரதியார் ச. சோ:-

குடும்பப் பெயர் : பாரதியார்

பிற : சண்முக சோமசுந்தரம்

பதிப்பாசிரியர், பதிப்பு, .மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர், பிற துணையாசிரியர்கள், நூலின் பெயர் ஆகியவை பின்வருமாறு பதியப்படும்.

கலித்தொகை : பதிப்பாளர் - சி. வை. தாமோதரம்.

கால்டுவெல் ஒப்பிலக்கணம் : காழி. சிவ. கண்ணு -

கா. அப்பாத்துரை.

தமிழக வரலாறு.: பத்தாம் பதிப்பு.

தமிழ்க்கலை இல்லம்.

ஓவியம் - மணி.

நூலைப்பற்றிய அடையாளம் அல்லது விளக்கம் (Imprint) என்பது ,

1. வெளியிடும் இடம், 2. வெளியீட்டாளர், 3. வெளியிட்ட நாள் முதலியவை சேர்ந்த ஒன்று. இவையும் அட்டவணை அட்டையில் பதியப்படும்.

சென்னை, பாரி நிலையம், 1960.

மதுரை, மீளுட்சி புத்தக நிலையம், 1960.

நாலைச் சரிபார்த்தல் ( Collation) என்பது நூலின் அமைப்புப் பற்றித் தெரிந்து கொள்ளுதலாகும். பக்கம், தொகுதி, நூலின் நீள அகலம், படங்கள் ஆகியன அட்டவணை அட்டையில் பதியப்படும்.

400 பக்கம், படம், 23 cm

10 தொகுதி, படம், 23 Cm.