பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூலட்டவணை தயாரிப்பதில் கடைப்பிடிக்கும் பொதுவான முறைகள் :- முதலில் நூலின் தலைப்பைப் படிக்கவேண்டும். பின்னர் பொருளடக்கத்தின்மீது ஒரு பார்வை செலுத்த வேண்டும். அதன்பின் நூலின் உள்ளே ஒரு கண்ணுேட்டம் செலுத்த வேண்டும். பிறகு தேவையானவற்றைப் பதிய வேண்டும். புதினங்கட்கு இரண்டு அட்டைகள் போதும். பிறவற்றுக்கு மூன்றுமுதல் ஐந்து அட்டைகள் வேண்டும். அட்டவணை அட்டைகள் தயாரிக்கும் முன்பு அதனைப்பற்றிய நூல்களில் ஒன்றிரண்டையாவது படிக்க வேண்டும். 'Catalog Rules, Author And Title Entries” (American Library Association) என்ற நூல் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. உயர்நிலைப்பள்ளி நூலகத்திற்கு இந்த நூல் கூறுகிறவாறு அட்டவணை தயாரித்தால் போதும்.

உயர்நிலைப்பள்ளி நூலகத்திற்கு ஆசிரியர் பட்டியலும் பொருட்பட்டியலும் இன்றியமையரதன. முன்னது பின்னதைவிடத் தயாரிக்க எளிதானது. பொருட் பட்டியலில் ஒழுங்கும் சிக்கனமும் தேவை. இதற்கு M. E. SEAR's List of Subject Headings for Small Libraries என்ற நூல் மிகுந்த உதவியாக இருக்கும். ஒருசில நூல்களில் தவிர பெரும்பாலான நூல்களில் பெயர்கள் சிறியவையாகவே இருத்தலால் அதையே பயன்படுத்தலாம்.

அட்டவணை மூன்று விதமாகத் தயாரிக்கலாம். அவை வருமாறு:-

1. நூல் வடிவமானது.

2. ஒட்டு வடிவமானது-அதாவது, தனித்தாள்களால் ஆயது.

3. அட்டைகளாலாயது.