பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

69


இவற்றில் முதல் வகையானது பயன்படுத்த வசதியானது, எளிதாக நூல்களைப் பார்த்து எடுக்கலாம். ஆனல் ஒரு தொல்லை உண்டு. பிற்சேர்க்கைகளைச் சேர்க்க முடியாது. வேறு எங்காவது காலியிடங்களிற்ருன் சேர்த்தல் வேண்டும். ஏனைய இரண்டு வகைகளில் இந்தத் துன்பம் இல்லை. என்ருலும் இவற்றிலே சிறந்தது அட்டைகளாலாய அட்டவணையே. பள்ளியில் இதிலே பழகும் மாணவர்கள் பின்னர் கல்லூரி, பல்கலைக்கழகம், பொது இடம் ஆகிய இடங்களிலுள்ள அட்டை அட்டவணையை எளிதாகப் பயன்படுத்தி நூல் பல எடுத்துப் படிக்க வசதி ஏற்படும்.


கொடுக்கல் வாங்கல்

நூற் பதிவும், அட்டவணை தயாரிப்பும், அடுக்கலும் முடிந்த பின்னர் ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் நூல்களைக் கொடுக்க முற்பட வேண்டும். நூலகத்தில் குறிப்பு நூல்களும் (Reference Books) இருக்கும். அவை அல்லாத நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும். எடுத்துச் செல்லப்பட்ட நூல்களை விரைவில் திரும்ப வாங்கத் தகுந்த விதிமுறைகள் இருத்தல் வேண்டும்.

நூல்களை மாணவரும் எடுப்பர்; ஆசிரியரும் எடுப்பர். என்ருலும் மாணவரைவிட ஆசிரியர்க்கு அதிகமான நூல்களை வேண்டிய அளவுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்ருல் ஆசிரியர்கள் அன்ரறட வகுப்புக்காக முன்கூட்டியே தயாரித்து வரல் வேண்டும். ஒரு சிலர் நூலகத்துக்கு வராமல் இருப்பது பெருமை என்று கருதுகிரறர்கள். இந்த நிலை என்று ஒழியுமோ? ஆனால் தற்காலத்தில் மாணவர்கள் நூலகத்தை நன்கு பயன் படுத்துகின்றனர்.