பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நாம் சென்று வாங்காவிட்டால் அது தன் முன்னேய இருப்பிடத்தை அடைந்துவிடும்.

நாம் கேட்ட நூலே நூலகத்தார் வாங்கியிருக்கவில்லை என்றல் நூலகத்தலைவர் அதனை இரண்டு முறைகளில் பெற்று நமக்குத் தரலாம். பணம் இருக்குமானல் விலைக்கு வாங்கித் தரலாம். இல்லையேல் பிற நூலகத்திலிருந்து கடன் வாங்கித் தரலாம். கடன் வாங்கித் தர வேண்டுமானல் முன்கூட்டியே நூலகக் கூட்டுறவு மன்றம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நாட்டுக்குக் கூட்டுறவு நூலக மன்றம் தேவை. அது எல்லா நூலகங்களையும் உறுப்புக்களாகக் கொண்டதாகவும், பிற நூலகத்தில் கிடையாத, வாங்க முடியாத நூல்களை உடையதாகவும், வன்மை வாய்ந்ததாகவும் விளங்கவேண்டும். இதற்கு எல்லா நூலகங்களும் மத்திய-மாநில அரசாங்கத்தின் உதவியோடு ஒத்துழைக்க வேண்டும்.


தண்டம்

ஒரு சிலர் சோம்பலின் காரணமாகக் குறித்த நாளில் நூலைத்திருப்பித் தருவதில்லை. அதற்காக நூலகத்தார் அதிகப்படியான நாள் ஒன்றுக்கு ஏதாவது ஒரு தொகையைத் தண்டமாக வாங்கி அதனை நூலகப் பணத்தோடு சேர்த்துவிடுவர். வாங்கிய தண்டத்துக்கு 'ரசீது' (Receipt) ஒன்றைக் கொடுத்துவிட்டாற் போதும். அதற்கெனத் தனிப்பேரேடு தேவையில்லை. இத்தண்ட முறையினல் நாளடைவில் காலக்கழிவு குறையும்.


சிதைந்த நூல்களைச் சீர்படுத்தல்


நூல்கள் செய்தலில் நமது நாடு இன்னும் முன்னேறவில்லை. வாங்கிய சில மாதங்களிலேயே நமது நாட்டு நூல்கள் கைம்பெண்