பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.உயர்நிலைப்பள்ளி
நூலகம்
1. தோற்றுவாய்பள்ளிக்கொரு நூலகம்


உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் வளர்ச்சியிலே உள்ள நூலகத்தின் பங்கின் சிறப்பை அறிஞர் பெருமக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளனர். நகரமாயினும் சரி; சிறு கிராமமாயினும் சரி அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு நூலகம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆசிரியராயினும் ஆகுக; மாணவராயினும் ஆகுக, எவராயிருப்பினும் அவர் தமது பாடநூலோடு நின்றுவிடுதல் இயலாது; இயலினும் அது கல்வியை வளர்க்காது. ஆசிரியர் தமது பாடத்தை மாணவர் மனங்கொள நடத்தவேண்டுமானல்—மாணாக்கர் தமது பாடத்தை ஆசிரியர் சொல்லித் தரும் பொழுது நன்கு புரிந்துகொண்டு மேலும் விளக்கம் பெறவேண்டுமானல்—இருவரும் பாட நூலோடு தொடர்புடைய பிற நூல்களையும் வகுப்புக்குச் செல்வதற்கு முன்னும், சென்ற பின்னும் படித்தல் வேண்டும். அவ்வாறாயின் உயர்நிலைப் பள்ளிக்கு ஏற்ற நூலகம் இருத்தல் வேண்டுமன்றோ?

உயர்நிலைப்பள்ளி நூலகத்தின் இன்றியமையாமை அரசினர் தயாரித்த உயர்நிலப்பள்ளி அறிக்கையிலே நன்கு வலி