பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

73


நிலையை அடைந்து விடுகின்றன. அதனால் நூலகத்தலைவர் நூல்களைச் சிதையாதவாறு கவனிக்க வேண்டும். சிதைந்த நூல்களை அவ்வப்பொழுது கவனித்துச் சீர்படுத்த வேண்டும். ஆண்டுக் கணக்கு எடுக்கும்போது சிதைந்த நூல்களையும் கணக்கெடுக்க வேண்டும். சிதைந்த நூல்சளைச் சீர்படுத்தும் போது அங்த நூல் அவ்வளவாகச் சிதையாவிட்டால், நூலகத்தாரே அதனைப் பார்த்துவிடலாம். முழுவதும் சிதைந்திருந்தால், சிதைந்த நூலின் விலையைவிடத் தைப்புக்கூலி அதிகமாகவும், அது எளிதில் கிடைக்க வல்லதாகவும், தைப்பதற்கு ஏற்றதல்லாத ஒன்றகவும், அவ்வளவு முக்கியம் இல்லாத ஒன்ருகவும் இருப்பின் அதனைக் கழித்துவிடுதல் நல்லதாகும்.


நூலகத்தலைவரின் முக்கிய பணி


நூலகத்தலைவரின் முக்கிய கடமை, வரும் மாணவர்க்கு எப்படி நூலை அலமாரியிலிருந்து எடுத்துப் படிக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதேயாகும். மாணவராயினும் சரி, படித்துப் பட்டங்கள் பல பெற்றவராயினும் சரி, இன்னும் பலருக்கு நூல்களை எடுத்துப் படிக்கும் முறை சரியாகத் தெரியவில்லை. பலருக்கு நூலின் அருமை பெருமை ஒன்றிரண்டுகூடத் தெரியாது. சிலர் படித்த பக்கம் மறந்துவிடும் என்று அப்படியே விரித்துக் கவிழ்த்து வைக்கின்றனர். இப்படி ஐந்தாறு தடவை வைத்தால் போதும்; நூலின் பல பக்கங்கள் சாயம் பூசப் பெற்று, பிரிவினை முழக்கம் செய்து தனி நாடு கேட்டுவிடும்! ஒரு சிலர் பக்கம் புரட்ட வரவில்லையானல் உடனே வாயில் எச்சிலேத் தொட்டுப் பக்கத்தைப் புரட்டுவர். இது ஒரு சாபக்கேடு. இதனல் நூல் நாறுவதோடு, நோய் பிடித்தவர் தொடுவதினல் தெத்துநோய்வேறு பரவித் தொலையும். இந்த அற்பப்பழக்கம் என்று தொலையுமோ?