பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

75


ஆண்டுக்குச் சில நூல்கள் தொலைவது இயல்பு. அதற்காக நூலகத்தார் நூல்களைத் தொலைக்கவேண்டும் என்பது பொருள் அன்று. கூடிய வரையில் தொலைக்காமல் பார்த்துக்கோடல் முக்கியம். கணக்கெடுக்குமுன் கொடுக்கல் வாங்கல் நிறுத்தப் பட்டதையும், வெளியிலே சென்ற நூல்கள் உரிய நாளில் திரும்ப வேண்டியதையும் நூலகத்தார் அறிவித்துவிட வேண்டும். கணக்கெடுக்குமுன் நூல்கள் அலமாரிகளில் நிறைந்துவிட்டதா என்பதைப் பார்த்தல் மிகமிக முக்கியம்.

கணக்கெடுக்கின்போது மாணவர்கள் பயன்படுத்தப்படலாம். இரண்டிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொரு இணைக்கும் ஒவ்வொரு துறையைக் கொடுக்கலாம். கணக்கெடுப்பு இரண்டு வகையில் நடைபெறும். ஒருவர் அட்டவணை அட்டையில் உள்ள குறிப்பெண்ணையும் (Call Number), வரிசை எண்ணையும் (Accession Number) படிக்க, மற்றெருவர் அலமாரியினைச் சரிபார்க்கவேண்டும். இஃது ஒரு முறை. அலமாரியில் காணப்படாத நூல்களைக் குறித்து அவை காணவில்லை என்றல் மற்றெரு முறை. இந்த முறை சில வேளைகளில் தவருகப் போகும். அதனல் முதல் முறையே சிறந்தது. காணமற் போன நூற்பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டியபின் நூலகக் குழுமுன் வைக்க வேண்டும். குழு ஒப்புக்கொண்டபின், அதற்கெனத் தனி அலமாரிப் பேரேடு இல்லாவிடில், கழிவுப் பேரேட்டில் அவற்றைப் பதிய வேண்டும். அதிலே குறிப்பு எண்ணும், வரிசை எண்ணும் பதியப்பட வேண்டும். கணக்கு எடுத்தபின் பல நூல்கள் தொலைந்து போயிருந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒன்று மக்களது அறியாமை, மற்றென்று நூலகத்தாரின் திறமைக்குறைவு ஆகிய இரண்டும் காரணமாகலாம். இந்த இரண்டையும் காட்டி மாணவரையும் ஆசிரியயையும் நூலகத்தாரையும் எச்சரிக்கை செய்தல் வேண்டும்.