பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

உயர்நிலைப்பள்ளி நூலகம்


பயன்படுத்துவார்கள். நூலகமும் நன்ருக நடைபெறும். விதிகள் ஒழுங்காக அமைந்தால்தான் அவை நடைமுறைக்கு ஒத்து வரும்


முடிவுரை


இதுகாறும் பள்ளிநூலகம் ஏன் அமைக்க வேண்டும் எப்படி அமைக்க வேண்டும் என்பதுபற்றிப் பார்த்தோம் இனிமேல் தற்காலத்தில் இயங்கும் உயர்நிலைப்பள்ளி நூலகங்கள் பற்றிப் பார்ப்போம்.

'நூலகம் என்று அழைக்கத்தக்க நூலகம் தற்காலத்தில் நமது நாட்டில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் இல்லை. இருக்கின்ற நூலகங்களில் அங்கங்கே வாங்கிய நூல்களும் தேவையற்ற நூல்களும்தான் நிறைந்துள்ளன. மேலும் பள்ளி நூலகத்தை ஒரு குறைந்த சம்பளக்காரரோ, நூலகத்தைக் கண்டாலே வெறுப்புக் கொள்ளும் ஆசிரியரோ மேற்பார்ப்பார். இத்தகைய நூலகத்தினல் மாணவர்கள் பயன் பெறுதல் என்பது குதிரைக் கொம்பே. இத்தகைய அவல நிலைக்குக் காரணம் நம்மில் பெரும்பாலோர் நூலகத்தின் அருமையினை உணராதிருப்பதேயாகும்.'

(-உயர்நிலைப்பள்ளிக் குழு அறிக்கை. (1952-53) )

பழைய நூலகங்களையெல்லாம் தற்கால முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு திருத்தி அமைத்தல்வேண்டும்.

உயர்நிலைப்பள்ளிக் குழுவின் அறிக்கை பள்ளிநூலகம் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதைக் குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது: